என் சரித்திரம் - பக்கம் - 343







என்பது அவற்றில் ஒன்று. இவ்வாறு பாடல்களை இயற்றி வந்த போது என் மனத்துள்ளே ஒரு பெருமிதமுண்டாகும். என் சிறிய தந்தையார் அவ்வப்போது நன்றாயிருக்கிறதென்று பாராட்டுவார்.

திருவேரக மாலை


அப்பால் சுவாமிமலையிலுள்ள முருகக் கடவுள் விஷயமாகப் பதினாறு கட்டளைக் கலித்துறைகளை இயற்றினேன். உயர்ந்த சாஸ்திரக் கருத்துக்களோ, கற்பனைகளோ அப்பாடல்களில் அமையவில்லை. என்னுடைய அனுபவம் சிறிது; பழக்கமும் குறைவு. அந்த அளவில் எத்தகைய கருத்துக்கள் இருக்குமோ அவைகளையே அப்பாட்டில் காணலாம்.

பலவகையான துன்பங்களில் புண்பட்டவன் நான்; ஆதலின், அத்துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமென்று என் மனத்துள் இருந்த ஆவல் திருவேரகச் சண்முகப்பிரானை நோக்கி நான் கூறிய பிரார்த்தனையில் அங்கங்கே புலப்படும்.

“ஆடும் அரவிற்கு நேராகச் சீறும் அவரையகன் றீடொன் றடியர்க ளோடென்று மேவி யிருப்பவருள் நாடு மிருவர் தமக்கரி யானரு ணாததுயர் சாடும் புனற்பொன்னி சூழ்திரு வேரகச் சண்முகனே”

சண்முகப்பிரான் ஞாபகத்தோடு ஆறுமுகத்தா பிள்ளையின் ஞாபகமும் எனக்கு அப்போது இருந்ததுதான் இத்தகைய கருத்துக்கள் எழுதுவதற்குக் காரணமாகும்.

ஆனந்தவல்லி பஞ்சரத்தினம்


இச்செய்யுட்களை எல்லாம் எழுதிய என் சிறிய தந்தையார், “இந்த ஊர் அம்பிகைமேல் ஏதேனும் பாடலாமே” என்று








தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
பக்கம் - 343 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - தந்தையார், சிறிய, நான், இயற்றினேன்