நவக்கிரக மந்திரங்கள் - சுக்கிரன்
சுக்கிரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சுக்கிர தசை அல்லது சுக்கிர அந்தர் தசையின் போது:
சுக்கிரனின் கடவுளான தேவியைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி ஸ்ரீ சூக்தம் அல்லது தேவி துதி அல்லது துர்கா சாலிசா படிக்க வேண்டும்.
சுக்கிர மூல மந்திர ஜபம்:
"ஓம் ட்ரம் ட்ரீம் ட்ரௌம் ஷக் சுக்ராய நமஹ",
40 நாட்களில் 20000 முறை சொல்ல வேண்டும்.
சுக்கிர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!
தமிழில்,
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்!
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!
தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணை அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
பூஜை: தேவி பூஜை.
ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சுக்கிர காயத்ரி மந்திரம்
அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||
சுக்கிர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 36 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுக்கிரன் - Venus - Mantras for the nine planets - நவக்கிரக மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்