நவக்கிரக மந்திரங்கள் - சந்திரன்

சந்திரன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சந்திர தசை அல்லது சந்திர அந்தர் தசையின் போது:
சந்திரனின் கடவுளான கௌரியைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அன்னப்பூர்ணா சோஸ்திரம் படிக்க வேண்டும். சூரிய மூல மந்திர ஜபம்:
"ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ",
40 நாட்களில் 10000 முறை சொல்ல வேண்டும்.
சந்திர ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.
ததி சங்க துஷாராபம்
ஷீரோதார்ணவஸம்பவம்!
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!
தமிழில்,
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி!, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி!, சத்குரு போற்றி!
சங்கடந் தீர்ப்பாய் சதுர போற்றி!
7000 முறை சொல்ல வேண்டும்.
தொண்டு: திங்களன்று நன்கொடையாக மாட்டுப்பால் அல்லது அரிசி கொடுக்க வேண்டும்.
நோன்பு நாள்: திங்கள்.
பூஜை: தேவி பூஜை.
ருத்ராட்சம்: 2 முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.
சந்திர காயத்ரி மந்திரம்
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||
சந்திர தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 5 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சந்திரன் - Moon - Mantras for the nine planets - நவக்கிரக மந்திரங்கள் - Mantras - மந்திரங்கள் - Astrology - ஜோதிடம்