சேது - காட்சி 35 - பகல் - INT. / அபிதா வீடு
குளோஸ் ஷாட் - குருக்கள் மந்திரம் படித்துக் கொண்டிருக்கிறார். குளோஸ் ஷாட் - முகத்தில் பிளாஸ்திரியுடன் அபிதாவின் அக்கா கணவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருகிறான். குளோஸ் ஷாட் - அரிசி புடைத்தபடி வாசலுக்கு வரும் அபிதா அத்திரம் பேரைப் பார்க்கிறாள். மிட் ஷாட் - கொல்லைப் புறத்தில் சோகமாக நிற்கும் அக்காவிடம் வந்து சொல்கிறாள் அபிதா.
அபிதா : அக்கா... அத்திம்பேர்...!
குளோஸ் ஷாட் - அக்கா நம்பமுடியாமல் பார்க்கிறாள். மிட் ஷாட் - அத்திம்பேர் குழந்தையுடன் மனைவியை பார்க்கிறான்.
குளோஸ் ஷாட் - அக்கா: எப்படி இது..?
காயத்தைக் காட்டி கேட்கிறாள்.
பையன் : அம்மா...
மிட் ஷாட் - அத்திம்பேர் : சரி கிளம்பு...
குளோஸ் ஷாட் - அக்கா : பணம்...
அத்திம்பேர் : அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நீ புறப்படு...
அபிதா அக்கா புறப்படத் தயாராக ஜூம் ஃபார்வர்டு அபிதாவும் குருக்களும் அன்னாந்து கடவுளை சேவிக்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 66 | 67 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், அத்திம்பேர்