மருதகாசி பாடல்கள் - பக்கம் - 91

ஆண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான் உன்னைப் போல பார்க்கலே! கேட்டாலும் கேட்டேன்!-உன் பேச்சைப் போல கேக்கலே! பெண் : பார்த்தாலும் பார்த்தேன்-நான் ஒன்னைப் போல பாக்கலே! கேட்டாலும் கேட்டேன்-ஒன் பேச்சைப் போலே கேக்கலே! ஆண் : பூத்திருக்கும் மலர் முகமோ பொன்னைப் போல மின்னுது-உன் போக்கை மட்டும் பார்க்கையிலே எதையெதையோ எண்ணுது! பெண் : படபடத்து வெடவெடத்து சடசடத்துப் போவுது! பக்கத்திலே நீயிருந்தா இன்னான்னமோ ஆவுது! ஆண் : காணுகின்ற பொருளில் எல்லாம் உன்னுருவம் தெரியுது! காதலென்றால் என்னவென்று எனக்கு இன்று புரியுது! பெண்: ஏதோ ஒண்ணு என்னையும் உன்னையும் இப்படிப் புடிச்சு ஆட்டுது! இருந்த இருப்பெ நடந்த நடப்பெ மறக்க வச்சு வாட்டுது! |
ஆயிரம் ரூபாய்-1964
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 91 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - பெண்