மருதகாசி பாடல்கள் - பக்கம் - 9

என்பன போன்ற பாடல்களும் அன்று காடுகரையெல்லாம். எதிரொலித்து மணமூட்டின, ஏன்? இன்றும் தான்!
"அந்தப் பாடலாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு வருமா?" என்று கூட ஏங்கியிருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு என்னையும் அறியாமல் ஒரு நாள் திடீரென்று எனக்குக் கிடைத்தது. 1965-ம் ஆண்டு என்ற நினைவு. என் நண்பர் ஒருவருடன், திரைப்பட நடிகர் V. K. ராமசாமி அவர்கள் இல்லத்திற்குச் செல்கின்றேன், இரவு நேரம். திரு V. K. R. உடன் இன்னொரு பெரியவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அழைத்துச் சென்ற நண்பர் திரு V.K.R அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்துகிறார். அந்த நொடியே அவர் அருகில் அமர்ந்திருந்த பெரியவர், திடுமென எழுந்து என் கரங்களை சகோதர பாசத்தோடு, உரிமையோடு பற்றிக் கொண்டு உறவு கொண்டாடி நலம் விழைகிறார். முன் பின் அறியாத இளைஞனாகிய என்னை, அத்துணை பாசத்தோடு அரவணைத்துப் பாராட்டத் தொடங்கிய அவர்தான் பெருங் கவிஞர் மருதகாசி என்று அறிந்து, திகைத்துப் போய் விடுகின்றேன். அந்தக் கவிதைப் பெருமகனின் பணிவு, இன்னும் என்னுள் பசுமையாக நிழலாடிக் கொண்டிருக்கின்றது.
ஏறக்குறைய 4000 பாடல்களை அரிய கவிதை இலக்கியச் சொத்தாக வழங்கி இருக்கின்ற அவரின் ஆற்றலால் தமிழ்க் கவிதை உலகம் தலை நிமிர்ந்து நிற்கிறது. இன்னிசைத் துணையோடு எதிரொலித்து வரும் அந்தப் படைப்புகளெல்லாம் நூல் வடிவம் பெறவில்லையே என்று ஏங்கிக் கிடந்த, எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். திரைப்படப் பாடல்களை மக்கள் இலக்கியமாக ஆக்குவதில் முயன்று வெற்றி கண்டவர்களில், குறிப்பிடத் தகுந்தவர் அண்ணன் மருதகாசி அவர்கள்.
எளிமை, இனிமை, அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப அமையும் திரைப்படப் பாடலாக இருந்தாலும், அதனுள் சமூகப்பார்வையைப் பிணைத்து வெற்றி காணும் திறமை அவருக்கே உரிய தனித் திறமையாகும்.
"அழகை ரசிப்பதில் கவிஞன் நான்! அன்பு காட்டினால் அடிமை நான்! பழகும் தன்மையில் பண்புள்ள தமிழன் பரந்த நோக்கம் உள்ளவன் நான்!" |
என்ற அவரின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாகவே இன்றும் அவர் வாழ்ந்து வருகின்றார்.
எந்தவிதப் பின்னணிகளும் இல்லாமல் எந்தவிதப் பெரிய மனிதர்கள் அரவணைப்பும் இல்லாமல், தன் திறமை ஒன்றினாலேயே வெற்றி கண்டு, பல்லாயிரம் விழுதுகளுடன் படர்ந்து நிற்கின்ற ஒரு ஆலமரமாய் நிமிர்ந்து நிற்கின்ற பெருங்கவிஞர் மருதகாசி அவர்கள், இன்றைய கவிதை உலகில் குறிப்பாக, தமிழ்த் திரைப்பட உலகில் தலையாய வழிகாட்டி என்றால் மிகை இல்லை. தன்னிகரில்லா இந்த இன்னிசைப் பெருங்கவிஞரின் உழைப்பால், ஆற்றலால் தமிழன்னை, பெரிதும் புன்னகைத்துப் பூரிப்படைந்துள்ளாள்! வழி காட்டுதற்குரிய இக்கவிஞரின் வழிநடந்து வாழ்வோம். இப்பெருமகனை வணங்கி வாழ்த்துவோம்.
வெல்கபெருங்கவிஞர் மருதகாசி கொள்கைகள்!
அன்பன்.
பொன்னடியான்
"முல்லைச்சரம்"
43, துரைசாமி சாலை,
வடபழனி, சென்னை-26
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 9 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மருதகாசி, நான், கவிதை, வெற்றி