மருதகாசி பாடல்கள் - பக்கம் - 86

முத்த : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்! முருகன் : செல்லக் கிளி மழலை மொழி சிந்திட வேணும்!-நாம் செவியாற அதைக் கேட்டு மகிழ்ந்திட வேணும்! முத்த : கள்ள மில்லா அன்பை கன்னித் தமிழ் பண்பை முருகன் : கலந்துணவாய் நாமதற்கு ஊட்டிட வேணும்! இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-அதை அள்ளிக்கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்! முருகன் : தெள்ளு தமிழ்க்கலைகளிலே தேர்ந்திட வேணும்!-பொது சேவையிலே முன்னணியில் திகழ்ந்திட வேணும்! முத்த : உள்ளம் ஒன்று கூடும் உறவின் பலன் நாடும் நம் கனவும் நனவாகி நலம் தர வேணும்! இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்! அதை அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்! |
பிள்ளைக்கனியமுது-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 84 | 85 | 86 | 87 | 88 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 86 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - வேணும், அணைத்து, இன்பம், அடைந்திட, முருகன், பிறந்திட, பிள்ளைக், அமுது, ஒண்ணு, முத்த