மருதகாசி பாடல்கள் - பக்கம் - 59

அலிபாபா: மாசிலா உண்மைக் காதலே? மாறுமோ செல்வம் வந்த போதிலே! மார்ஜியானா: பேசும் வார்த்தை உண்மை தானா? பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா? அலிபாபா: கண்ணிலே மின்னும் காதலே! கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே? நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே! மார்ஜியானா: நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே? (பேசும்) அலிபாபா: உனது ரூபமே உள்ளந் தன்னில் வாழுதே! மார்ஜியானா: இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே! இருவரும்: அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்! இங்கு நாம் இன்பவாழ்வின் எல்லை காணுவோம்! (மாசிலா) |
அலிபாபாவும் 40 திருடர்களும்-1955
இசை : S. தட்சிணாமூர்த்தி
பாடியவர்கள்: A. M. ராஜா P. பானுமதி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 57 | 58 | 59 | 60 | 61 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 59 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - மார்ஜியானா, அலிபாபா