மருதகாசி பாடல்கள் - பக்கம் - 203
தோழிகள்: ஆஹா ஹா…………. மாமா மாமா பன்னாடெ ! வாங்கி வாயேன் பொன்னாடெ ! வரவு மட்டும் பொண்ணோடெ ! செலவு எல்லாம் ஒன்னோடெ ! ஜீவா: மாமா ! மாமா ! மோகனா: மாமா ! மாமா ! ஜீவா: ஆமாஞ்சாமி காரியம் முடிச்சி அனுப்பி வைக்கிறோம் கையோட ! தோழிகள்: சீமான் ஒனக்கு வரிசை வம்மெ சாமான் தாறோம் பையோடெ ! கோமாளிக்கும் கோமாளி ! ஏ குலுக்கி மினுக்கும் ஏமாளி ! வரவு மட்டும் பொண்ணோடெ செலவு எல்லாம் ஒன்னோடெ ஜீவா: கத்தியெடுத்தாலே சத்தமில்லாமலே தோழிகள்: பத்துப் பதினஞ்சு கத்திரிப் பிஞ்சுகளெ ஜீவா: பாஞ்சு பாஞ்சு வீரன் நீயும் பதுங்கி ஒதுங்கி நறுக்குவே ! தோழிகள்: ஆஞ்சு ஒஞ்சு அசந்து போயி விழுந்து எழுந்து பொறுக்குவே ! ஜீவா: செத்துக்கிடக்கிற கட்டு விரியனை எட்டியிருந்தே நொறுக்குவே ! தோழிகள்: புத்தியிருக்குது கூஜா தூக்க ! பித்துயிருக்குது ராஜாவாக வரவுமட்டும் பொண்ணோடெ செலவு எல்லாம் ஒன்னோடெ! மோகனா: மாப்பிள்ளையின்னா மாப்பிளைதான் மண்ணாங்கட்டி மாப்பிளே ! ஜீவா: சாப்பிட்டுப் பிட்டு ஏப்பம் விட்டு நல்லாத் துரங்குவே தோப்பிலே ! கூப்பிடும் போது கொறட்டை விடுவே ! பொண்ணு. கூப்பிடும் போது கொறட்டை விடுவே ! ஆப்பிட்டுக்கிட்டு அவதிப்படுவே ! |
பெற்ற மகனை விற்ற அன்னை-1958
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 201 | 202 | 203 | 204 | 205 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 203 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - ஜீவா, மாமா, தோழிகள், ஒன்னோடெ, செலவு, பொண்ணோடெ, எல்லாம்