மருதகாசி பாடல்கள் - பக்கம் - 189

இறந்த கால வாழ்வை எண்ணி ஏங்காதே! எதிர்கால இன்ப வாழ்வை உதறித்தள்ளாதே-மனமே. (இறந்த) பறந்து போகும் வானம்பாடி ஜோடி பார்!-அவை பாடும் இனிய காதல்கீதம் தன்னைக்கேள்!-மனமே (இறந்த) அறுந்து போன பின்னும் அந்த யாழிலே!-புதிய நரம்பை மாட்டி நாதம் சேர்ப்பதில்லையா? சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-புயலால் சரிந்து போன வீட்டை இந்த உலகிலே-மீண்டும் பழுது பார்த்துக் குடியிருப்பதில்லையா? - மனமே (இறந்த) பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே-மண்ணில் பிறந்த ஜென்மம் மறைவதெங்கும் சகஜமே!-இதை மறந்து வீணில் வருந்தி என்ன லாபமே! நிறைந்த துன்பம் நீங்கி வாழ்வில் இன்பமே! சிறந்து வாழும் வழியைத் தேட வேணுமே! - மனமே (இறந்த) |
ஆசை அண்ணா அருமைத்தம்பி-1955
இசை: K. V. மகாதேவன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 187 | 188 | 189 | 190 | 191 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 189 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - இறந்த, மனமே