மருதகாசி பாடல்கள் - பக்கம் - 183

உள்ளம்: ஏ மனிதா! எங்கே ஒடுகிறாய்?. … நீ எங்கே ஒடுகிறாய்? வறுமை இருளால் வழி தடுமாறி மதிமயங்கி குருடனைப் போலே! எங்கே ஒடுகிறாய்? உருவம்: வறுமையின் உருவம்! பூமிக்கு பாரம்! வாழ்ந்தென்ன சாரம்! தீராவி சாரம்! குழந்தை: (எங்கே அப்பா) உள்ளம்: ஊழ்வினைப் பயனை வென்றதாரடா? உன் நிழல் உன்னை பிரிந்திடுமோடா? குழந்தை: (பிள்ளை யாரப்பா) உருவம்: மண்ணில் பிறந்த மனித பொம்மை நாம் மண்ணுடன் மண்ணாய் கலப்போம் ஒரு நாள் குழந்தை: (பூஜை செய்யனும் அப்பா) உருவம்: நாளும் கிழமையும் நலிந்தவர்க் கேது? நலம் பெற உலகில் மரணமே தோது? உள்ளம்: வாழ்வதற்கே தான் பிறந்தாய் உலகில்! உருவம்: வாழ்வ தெவ்விதம் எந்தன் நிலையில்? உள்ளம்: பொறுமை வேண்டும்: உருவம்: பொறுத்தது போதும்: உள்ளம்: உலகைப் பார்! உருவம்: நரகம் தான்! நரகம்! நரகம்! நரகம்! ! |
குமாஸ்தா-1953
இசை: C. பாண்டுரங்கன்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 181 | 182 | 183 | 184 | 185 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 183 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - உருவம், உள்ளம், எங்கே, நரகம், ஒடுகிறாய், குழந்தை