விலங்கியல் :: விலங்கியல்
11. குற்றிழைகள் என்றால் என்ன?
தசை இழைகள். புரோட்டோசோவா முதலிய உயிரிகளின் உடல் மேற்பரப்பில் காணப்படும் மயிரிழை போன்ற உறுப்புகள் இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை.
12. நீளிழைகள் என்றால் என்ன?
பரமேசியம் முதலிய கீழின உயிர்களில் காணப்படும் தசை இழைகள். இயக்கத்திற்கும் உணவு உட்கொள்ளவும் பயன்படுபவை.
13. விலங்கியலிலிருந்து தோன்றிய பயன்படுஅறிவியல்கள் யாவை?
கால் நடை அறிவியல், கால் நடை மருத்துவம்.
14. விலங்கியலில் தோன்றியுள்ள புதிய தொழில் நுட்பத் துறை யாது?
விலங்குயிரி தொழில் நுட்பவியல்.
15. ஆய்கருவி ஆய்வு என்றால் என்ன?
ஆய்வகத்தில் செய்யப்படும் ஆய்வு. எ-டு: திசு வளர்ப்பு.
16. உயிரி ஆய்வு என்றால் என்ன?
ஒர் உயிரியில் நடைபெறும் செயல்களை ஆய்தல்.
17. ஊடுபகுப்பு என்றால் என்ன?
1. ஒரு வழிப்படலம் மூலம் தேர்வு விரவல் வாயிலாக அமினோகாடிகள் முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை.
2. குருதியில் இருந்து கழிவுகளை இயற்கையில் சிறுநீரகம் பிரிக்கும் முறை. சிறுநீரகம் பழுதுபடுமானால் இப்பிரிப்பு செயற்கைச் சிறுநீரகம் மூலம் நடைபெறும்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விலங்கியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், முதலிய, சிறுநீரகம், ஆய்வு