விலங்கியல் :: வகைப்பாட்டியல்
1. வகைப்பாட்டியல் என்றால் என்ன?
தாவரங்களையும் விலங்குகளையும் ஒற்றுமைகளின் அடிப்படையில் பல அலகுகளாகப் பிரித்தல் வகைப் பாட்டியல் ஆகும்.
2. வகைப்பாடு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
1. விலங்கு வகைப்பாடு
2. தாவர வகைப்பாடு
3. இயற்கை வகைப்பாடு
4. செயற்கை வகைப்பாடு
3. வகைப்பாட்டியலின் தந்தை யார்? அவர் முறை எவ்வகையைச் சார்ந்தது?
ஸ்வீடன் நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் லின்னேயஸ். இவர் முறை செயற்கை வகைப்பாட்டு முறை சார்ந்தது.
4. இரு பெயரிடல் என்றால் என்ன?
ஓர் உயிருக்கு இரண்டு பெயர்கள் அளித்தல். ஒன்று பேரினப் பெயர். இரண்டு சிறப்பினப் பெயர்.எ-டு. ஹோமே! சேப்பியன்ஸ், இதில் முன்னது பேரினப் பெயர். பின்னது சிறப்பினப்பெயர்.
5. இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் யார்? இதன் சிறப்பென்ன?
அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ். இது ஒர் அறிவியல் பெயர். அனைத்துலகும் பயன்படுத்துவது.
6. வகைப்பாட்டு அலகுகள் யாவை?
1. உலகம்
2. பெரும் பிரிவு
3. வகுப்பு
4. வரிசை
5. குடும்பம்
6. பேரினம்
7. சிறப்பினம்.
7. இவ்வலகுகளில் எது சிறப்புள்ளது? ஏன்?
சிறப்பினமே சிறப்புள்ளது. எல்லா முக்கிய உருவியல் பண்புகளிலும் ஒன்றை மற்றொன்று ஒத்தமையும் தனி உயிரிகளைக் கொண்டதே சிறப்பினம். ஒர் உயிரியை இனங்கண்டறிய இது இன்றியமையாதது.
8. பேரினம் என்றால் என்ன?
வகைப்பாட்டு அலகுகளில் சிறப்பினத்திற்கு அடுத்த சிறப்புள்ளது. சிறப்பினத்திற்கும் குடும்பத்திற்கு இடையிலுள்ளது. இதில் தொடர்புடைய வகைகள் தொகைப்படுத்தப்பட்டிருக்கும். எ-டு. ஹோமோ.
9. உயிரினத்தின் இரு வகைகள் யாவை?
விலங்கினம், தாவர இனம்.
10. வேதி வகைப்பட்டியல் என்றால் என்ன?
வேதிப்பகுப்பின் நெறிமுறைகளையும் முடிவுகளையும் உயிரினங்களை வகைப்படுத்தப் பயன்படுத்துதல்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகைப்பாட்டியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வகைப்பாடு, என்றால், பெயர், என்ன, சிறப்புள்ளது, யாவை, முறை, வகைப்பாட்டு