இயற்பியல் :: அடிப்படைகள் - பக்கம் - 3
21. பருமன் என்றால் என்ன?
இடத்தை அடைத்துக் கொள்வது பருமன். பருமன் = நிறைxஅடர்த்தி, V= md அல்லது நீளம்xஅகலம்xஉயரம்.
22. தனி என்றால் என்ன?
நிலைமைகள், வரம்புகள், தடைகள் முதலியவற்றில் இருந்து தனித்திருத்தல், எ-டு. தனிவெப்ப நிலை, தனிச் சாராயம்.
23. சார்பு என்றால் என்ன?
ஒன்றைச் சார்ந்து அமைவது. எ-டு. சார்புக் கொள்கை.
24. சமன்பாடு என்றால் என்ன?
ஒன்று மற்றொன்றுக்குச் சமன் என்னும் கூற்று. எ-டு. E = mc²
25. கோவை என்றால் என்ன?
குறிகள், எண்கள் முதலியவற்றைக் கொண்ட தொகுதி. எ-டு a = (V-u)⁄t
26. வாய்பாடு என்றால் என்ன?
ஒரு பொது விதியைக் குறிகளால் குறிப்பது. எ- டு. A= r வட்டத்தின் பரப்பு.
27. மடக்கை என்றால் என்ன?
ஒரு எண்ணின் படிக்குறியாகத் தெரிவிக்கப்படும் எண். முழு எண், தசம எண் என இரு பகுதிகளைக் கொண்டது. அடிமானம் 10 உள்ள 210 இன் மடக்கை 2.3222. இதில் 2 சிறப்பு வரை. 0.3222 பின்னவரை.
28. செய்முறைவழி என்றால் என்ன?
இது விதிமுறைகள் வழிப்பட்ட நடைமுறை. சிக்கலுக்குத் தீர்வு காண உதவுவது.
29. இயல்நிகழ்ச்சி என்றால் என்ன?
இயற்கையில் காணப்படும் நிகழ்ச்சி. எ-டு. வானவில்.
30. அறிவியல் முறை என்றால் என்ன?
சிக்கலுக்குத் தீர்வு காணும் முறை. இதை நிறுவியவர் பிரான்சிஸ் பேகன். இம்முறையை மெய்ப்பித்தவர் கலிலியோ.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிப்படைகள் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், பருமன்