மருத்துவம் :: சில நிகழ்ச்சிகள்
1. சிரித்தல் என்றால் என்ன?
இதில் ஆழ்ந்த உள்மூச்சுப்பின் தொடர்ந்து காற்று எக்களித்து வெளிச்செல்லும். குரல் நாண்கள் அதிர்வதால் சிரிப்பொலி உண்டாகிறது. இயல்பான சிரிப்பு வேறு. நோய்ச்சிரிப்பு வேறு.
2. விக்கல் என்றால் என்ன?
இது குறுகிய உள்மூச்சுத் திணறல், குறுக்குத் தசை சட்டென்று சுருங்குவதால், இது ஏற்படுகிறது. குரல் வளையும் உடன் மூடுவதால் உள்மூச்சு தடைப்பட்டு விக்கல் ஒலி உண்டாகிறது. இயல்பாக ஏற்படும் விக்கலுக்கும் நோய்விக்கலுக்கும் வேறுபாடு உண்டு.
3. கொட்டாவி விடுதல் என்றால் என்ன?
இது நீண்டும் ஆழ்ந்தும் நடைபெறும் உள்மூச்சு. இதில் வாய் முழு அளவுக்கு திறந்திருக்கும். தளர்ச்சி, சோம்பல், போதிய காற்று இல்லாமை இஃது ஏற்படுவதற்கான காரணங்கள்.
4. தும்மல் என்றால் என்ன?
இச்செயலில் குரல்வளை திறந்திருக்கும். ஆழ்ந்த உள் மூச்சும் வலுவற்ற வெளிமூச்சும் இருக்கும். பாதி மூக்கு வழியாகவும் பாதி வாய் வழியாகவும் காற்று செல்லும். நெடிதரும் பொருள்கள் தும்மலை உண்டாக்கும். நீர்க் கொள்ளும் பொழுது நச்சியத் தாக்கத்தால் தும்மல் அதிகம் ஏற்படும்.
5. குறட்டை விடுதல் என்றால் என்ன?
உள்நாக்கு அதிர்வதால் இஃது உண்டாகிறது. உறங்கும் பொழுது வாயினால் மூச்சுவிடுவதால் இது நடை பெறுகிறது. இதில் ஒரு சத்தமும் இருக்கும். குறட்டை விடும்பொழுது மரம் வெட்டும் சத்தமும் கேட்கும்.
6. உறக்கம் என்றால் என்ன?
வெளித் துண்டல்களுக்கேற்பத் துலங்கல் குறைவாக உள்ள நிலை. உடலுக்கும் உள்ளத்திற்கும் இயற்கை ஒய்வு உறக்கம். கனவில்லாத உறக்கமில்லை. இதுபற்றி நன்கு ஆராயப்பட்டுள்ளது.
7. ரெம் என்றால் என்ன?
விரைந்த கண்ணசைவு (rapid eye movement) உறக்கத்தில் ஏற்படுவது.
8. கனவு என்றால் என்ன?
பகலில் நுகரும் காட்சிகள் உறக்கத்தில் கனவாக வருபவை.
9. கனவு பற்றிய உளவியல் கருத்து யாது?
ஈடேறா எண்ணங்களே உறக்கத்தில் கனவாக வருகின்றன. கனவு ஒருவர் ஆளுமையைத் தெரிவிப்பது. கனவு அதிகமாக வருமானால் உளக் கோளாறு என்பது பொருள். இதற்கு மருத்துவரை நாடுவது நல்லது.
10. கனவின் நன்மை யாது?
சிக்கல்கள் தீர கனவு உதவும். அறிவியலில் பல கண்டுபிடிப்புகள் கனவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம் கணக்கு மேதை இராமானுஜன் தம் கணக்குச் சிக்கல்களை எல்லாம் கனவிலேயே தீர்த்துள்ளார். இதற்கு கனவு அவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சில நிகழ்ச்சிகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கனவு, உறக்கத்தில், காற்று, இதில், உண்டாகிறது