மருத்துவம் :: முதன்மை மருத்துவத் துறைகள்
1. இதயவியல் என்றால் என்ன?
இதயத்தையும் அதன் வேலைகளையும் ஆராயுந் துறை.
2. இதய வரைவியல் என்றால் என்ன?
இதயத்தின் வேலையைப் பதிவு செய்தல்.
3. இதன் வகைகள் யாவை?
இதய மின்வரைவியல், இதய இயக்க வரைவியல்.
4. உச்சி வரைவியல் என்றால் என்ன?
இதய உச்சியின் மேல் முன் மார்புச் சுவரில் உண்டாகும். குறை அதிர்வெண் துடிப்பைப் பதிவு செய்தல்.
5. மீஒலி வரைவியல் என்றால் என்ன?
எதிரொலி வரைவியல்.
6. உட்கூறியல் என்றால் என்ன?
உடலின் உள்ளமைப்பை அறுத்துப் பார்த்து ஆராய்தல். அறுவையோடு தொடர்புடையது.
7. உட்கூறியலின் பல வகைகள் யாவை?
1. பயனுறு உட்கூறியல்.
2. ஒப்பு நோக்கு உட்கூறியல்.
3. வளர்ச்சி உட்கூறியல்.
4. முழு உட்கூறியல்.
5. நுண்ணோக்கு உட்கூறியல்.
6. நோய் உட்கூறியல்.
7. கதிரியல் உட்கூறியல்.
8. சிறப்பு உட்கூறியல்.
9. தள உட்கூறியல்.
10. கால்நடை உட்கூறியல்.
8. பயனுறு உட்கூறியல் என்றால் என்ன?
நோயறிதல் மற்றும் பண்டுவம் தொடர்பான உள்ளமைப்பு.
9. ஒப்பு நோக்கு உட்கூறியல் என்றால் என்ன?
விலங்குகளின் வேறுபட்ட உறுப்புகளின் உள்ளமைப்பை ஒப்பு நோக்குதல்.
10. வளர்ச்சி உட்கூறியல் என்ன?
அமைப்புக் கருவியல் ஆகும்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதன்மை மருத்துவத் துறைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - உட்கூறியல், என்ன, என்றால், வரைவியல், ஒப்பு