மருத்துவம் :: பதிய அறிவியல்

1. பதிய அறிவியல் என்றால் என்ன?
பதியவியல். உறுப்புகள் உடலில் மாற்றிப் பொருத்தப்படுவது பற்றி ஆராயும் மருத்துவத்துறை.
2. அயலொட்டு என்றால் என்ன?
ஒர் உறுப்பை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் ஒட்டுதல். சிறுநீரக ஒட்டு.
3. மயிர்ப்பதியன் என்றால் என்ன?
1959 இல் தொடங்கிற்றி. ஆண் வழுக்கைக்காக முதன் முதலில் மயிர்ப்பதியன் செய்தவர் ஆரன்டிரய்ச் என்னும் தோல் நோய் வல்லுநர்.
4. குருத்தெலும்பு வளர்ப்பு என்றால் என்ன?
நோயாளியின் குருத்தெலும்பிலிருந்து கண்ணறைகளை வளர்த்துப் பதியஞ் செய்து, சிதைந்த மூட்டுகளைச் சீர்செய்தல். ஸ்விடிஷ் மருத்துவர்கள் காயமற்ற முழங்கால் மூட்டுகளைப் பல நோயாளிகளிடம் நன்கு சரி செய்துள்ளனர். (1994)
5. எலும்புசோற்றுப் பதியன்கள் என்றால் என்ன?
எலும்புச் சோறு எலும்புகளின் மையத்திலுள்ளது. வெள்ளணுக்களை உற்பத்திசெய்து அவற்றை முதிர்ச்சியடையச் செய்வது. இந்த உற்பத்தி நின்றால் நோயாளி இறக்க வேண்டிவரும். இதற்குப் பதியன் மூலம் எலும்புச் சோற்றை ஊசிமூலம் செலுத்த வேண்டும். இதை மார்பெலும்பிலிருந்து எடுக்கலாம். எலும்புப் புற்றைப் போக்க இது சிறந்த முறை. (1995)
6. அயல் பதியஞ் செய்தல் என்றால் என்ன?
நல்ல நிலையிலுள்ள ஒருவரது உறுப்பைப் பழுதுபட்ட உறுப்பு உள்ளவருக்கு மாற்றீடு செய்வது. இது வழக்கத்திலுள்ளது.
7. உறுப்பகங்கள் என்பவை யாவை?
புகழ் வாய்ந்த பிரான்ஸ் பாஸ்டர் நிறுவனம் உயிருள்ள உறுப்புகளை உருவாக்கியுள்ளது. இவையே உறுப்பகங்கள். உடலில் பதிய வைக்கப்படும் பொழுது வேலை செய்யத் தவறும் உறுப்பின் வேலைகளைச் செய்பவை. சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பதியஞ் செய்யப்படுவதை மாற்றீடு செய்ய வல்லவை. (1993)
8. குழாய் வாய் இணைப்பு என்றால் என்ன?
சிரைகள், தமனிகள் அல்லது மற்றக் குழாய்களைச் சேர்த்து வழி உண்டாக்குதல்.
9. மருத்துவமனைப் பதியன்கள் என்றால் என்ன?
இது அக்ளா என்னும் அயல்நாட்டு நிறுவன வெளியீடு. இதிலுள்ள வியத்தகு விவரங்களாவன.
1. உலகம் முழுவதும் செய்யப்பட்ட சிறுநீரகப் பதியன் கள் 2,41,000
2. ஒருவர் சிறுநீரகத்தைப் பெற்று வாழும் அதிகக் காலம் 29 ஆண்டுகள்.
3. ஒருவர் இதயத்தைப் பெற்று வாழும் காலம் 20 1/2 ஆண்டுகள்.
4. ஒருவர் கல்லீரலைப் பெற்று வாழும் காலம் 22
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதிய அறிவியல் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, வாழும், காலம், ஒருவர், பதியஞ், பெற்று