முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » நீரிழிவு நோயினர் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டியவை
மருத்துவம் :: நீரிழிவு நோயினர் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டியவை
1. நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, கட்டுப்பாடான உடல் எடை என்பவை மிக இன்றியமையாதவை.
2. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைத் தவிர்க்க வேண்டுவதில்லை.
3. எல்லாவகைத் தானிய உணவுகளையும் உட்கொள்ளலாம். எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை விட எவ்வளவு உட்கொள்ள வேண்டும் என்பதே மிக இன்றியமையாதது.
4. உணவின் அளவு அவரவர் வேலை செய்யும் முறையையும் உடல் எடையையும் பொறுத்தே அளவிடப்படுகிறது.
3. இனிப்பு உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
6. நிலத்தின் அடியில் விளையும் கிழங்கு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
7. பச்சைக் கீரைகளையும் காய்கறிகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
8. பயறு வகைகளில் அதிகப் புரதச் சத்து உள்ளது. இதை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
9. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள, வெண் ணெய், நெய், தேங்காய் எண்ணெய், இறைச் சிக் கொழுப்பு முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
10. இதயம், சிறுநீரகம், கண், நரம்பு மண்டலம் ஆகியவை இந்த நோயால் பாதிக்கப் படுகின்றன.
11. இது தொடர்பான உடல் தொல்லைகளுக்கு மருத்துவரைக் கலந்து அறிவுரை பெறுவது நல்லது.
12. குறித்த நேரத்தில் உணவை உட்கொள்வது, மருத்துவரின் அறிவுரையின்பேரில் குறித்த நேரத்தில் தவறாமல் மருந்து உட்கொள்ளுவது, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இந்நான்கும் நீரிழிவு நோயின் கட்டுப்பாட்டுக்கு மிகவும் இன்றியமையாதவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நீரிழிவு நோயினர் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டியவை - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வேண்டும், தவிர்க்க, அதிகம், உடல், உட்கொள்ள, நீரிழிவு