மருத்துவம் :: சரகாவும் சிஸ்ருதாவும்
1. சரகாவின் சிறப்பென்ன?
இவர் சிறந்த ஆயுர் வேத மருத்துவர். கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவராக இருக்கலாம். செரித்தல், வளர்சிதை மாற்றம், தடுப்பாற்றல் ஆகியவை பற்றிய கருத்துகளை முதன் முதலில் கூறியவர். மரபியலின் அடிப்படைகள் தெரிந்தவர். மனித உடற்கூறையும் நன்கறிந்தவர். அவர் கணக்குப்படி நம் உடலிலுள்ள எலும்புகள் 360. இவற்றில் பற்களும் சேரும். தற்கால மருத்துவ இயல் கணக்கு 206. அவர் எழுதிய சிறந்த மருத்துவ நூல் சரகாசமிதா.
2. சரகாவின் மருத்துவக் கருத்துகள் யாவை?
மூன்று தோஷங்கள் இருப்பதால் உடல் வேலை செய்கிறது. தோஷங்கள் என்றால் நீர்கள் என்பது பொருள். அவை முறையே பித்தநீர், சளி, காற்று. தோஷங்கள் தாதுக்களால் உண்டாக்கப்படுகின்றன. தாதுக்கள் என்பவை குருதி, சதை, எலும்புச்சோறு ஆகிய மூன்றுமாகும். இத்தாதுக்கள் உணவோடு வினைப்படும் பொழுது தோஷங்கள் உண்டாகின்றன. ஒரே அளவு உணவுவை ஒருவர் உட்கொண்டாலும் வேறுபட்ட தோஷம் ஒவ்வொரு உடலிலும் உண்டாகிறது. இதனால்தான் ஒர் உடல் மற்றொரு உடலிலிருந்து எடை, வலிமை, ஆற்றல் ஆகியவற்றில் வேறுபடுகிறது. இம்மூன்று தோஷங்களின் சமநிலை குலையும் பொழுது, நோய் உண்டாகிறது. இச்சமநிலை மீண்டும் ஏற்பட மருந்துகள் கொடுக்கப்படவேண்டும்.
3. சரகாவின் மரபணு அறிவை விளக்குக.
ஒரு குழந்தையின் பாலை உறுதி செய்யும் காரணிகளை அவர் அறிந்திருந்தார். நொண்டி, குருடு என்னும் குறைகள் விந்தணு அல்லது கருமுட்டையில் ஏற்படும் குறையினால் உண்டாகுபவை. இது மெண்டல் கருத்துக்கு உடன்பாடே.
4. சரகாவின் தவறான கருத்து யாது?
இதயம் ஒரே குழியாலானது என்று கருதியது.
5. சரகாசமிதாவின் சிறப்பென்ன?
அத்ரேயா என்பார் பழங்கால மருத்துவர். அக்னிவேசா கி.மு. 8ஆம் நூற்றாண்டில் ஒரு மருத்துவ நூலை எழுதினார். சரகா இதைத் திருத்தி எழுதினார். இதுவே சரகாமிதா. இது மக்களிடையே செல்வாக்குப் பெற்றது. ஈராயிரம் ஆண்டுகள் மருத்துவத்தில் தரமான நூலாக விளங்கியது. அரபு மொழி, இலத்தின் மொழி முதலிய அயல்மொழிகளில் பெயர்க்கப்பட்டது.
6. சரகாசமிதா என்னும் தம் நூலில் அவர் குறிப்பிடுவன யாவை?
உரிய அறிவுடன் ஒரு நோயாளியின் உடலில் மருத்துவர் புக வேண்டும். அப்பொழுதுதான் அவர் நோய்களைக் குணப்படுத்த இயலும். முதலில் அவர் எல்லாக் காரணங்களையும் அறிய வேண்டும். இவற்றில் சூழ்நிலையும் அடங்கும். இக்காரணிகள் நோய்க்குக் காரணமானவை. இவற்றை அறிந்த பின்னரே என்ன மருத்துவம் என்பதைக் கூறவேண்டும். இவை போன்ற பல குறிப்புகள் இந்நூலில் காணப்படுகின்றன. அவற்றில் சில உடலியல், கருவியல், ஏதுவியல் முதலிய துறைகளைச் சார்ந்தவை.
7. சுஸ்ருதா யார்? அவர் பங்களிப்பின் சிறப்பென்ன?
கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த இந்திய அறிஞர். அவர் எழுதிய மருத்துவ நூல் சுஸ்ருதசமிதா. தவிரச் சிசேரியன் அறுவை பற்றி முதலில் கூறியவர் இவரே. இவர் உணர்வகற்றியலின் தந்தையும் ஆவார்.பல நுண்ணிய அறுவைக் கருவிகளையும் அவர் பயன்படுத்தினார்.
8. சுஸ்ருதா யார் வழித்தோன்றல்?
வேத விற்பன்னர் விஸ்வாமித்திரரின் வழித்தோன்றல்.
9. அவர் யாரிடம் மருத்துவக் கல்வி கற்றார்?
வாரனாசியில் திவோதாசா தனவந்திரியின் குடிலில் அறுவையும் மருத்துவமும் கற்றார். பின் இவர் அறுவையிலும் மருத்துவத்தின் பிற துறைகளையும் சிறந்து விளங்கினார்.
10. சுஸ்ருதா அறிந்த அறுவைக் கருவிகள் எத்தனை?
101 கருவிகள். அவர் பயன்படுத்திய முதலைச் கவ்வுச் சாமணமும் கழுகு மூக்குச் சாமணமும் இன்றும் பயன் படுகின்றன.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரகாவும் சிஸ்ருதாவும் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர், சரகாவின், மருத்துவ, தோஷங்கள், சுஸ்ருதா, முதலில், சிறப்பென்ன, இவர், மருத்துவர்