கணிதம் :: அணியும் அணிக்கோவையும்
1. அணி என்றால் என்ன?
ஒரு செவ்வக அடுக்கைத் தோற்றுவிக்க நிரல்களிலும் நிரைகளிலும் அமைக்கப்படும் அளவுத் தொகுதி பொதுக்குறியீடு இவற்றை அடைப்புக் குறிக்குள் அடக்குவது. அணிக்கோவை போன்று இதற்கு எண் மதிப்பு இல்லை. அளவுகளுக்கிடையே உறவுகளைக் குறிக்கப் பயன்படுவது.
2. அணியின் வகைகள் யாவை?
1. சேர்ப்பு அணி - சதுர அணி.
2. நிரலணி- தனிநிரல் கொண்டது.
3. மூலைவிட்ட அணி - ஒரு சதுர அணியே.
4. சமான அணி - வகையும் அணிவரிசையும் ஒன்று.
3. அணிகள் பயன்படும் துறைகள் யாவை?
புள்ளியியல், பொருளியல், அணுஇயற்பியல்.
4. அணி குறித்த வரலாறு யாது?
ஆங்கிலக் கணிதமேதை ஆர்தர் கெயல் (1821-1895) 1858 இல் அணிகளை அறிமுகப்படுத்தினார். இவர் நண்பர் ஜேம்ஸ் ஜோசப் சில்வஸ்டர் அணி என்னும் சொல்லைப் பயன்படுத் தினார்.
5. அணிகளின் உறுப்புகள் யாவை?
1. அணிகள் - A,B,C,D
2. உறுப்புகள் - a,b,c,d
6. அலகு அணி என்றால் என்ன?
குறி I. சமனி அணி. ஒரு சதுர அணி. இதில் முதன்மை மூலை விட்டத்தின் உறுப்புகள் எல்லாம் ஒன்றிற்குச் சமம். ஏனெனில், உறுப்புகள் 0. அணிப்பெருக்கலுக்கு, அலகு அணி சமனி அணியாகும்.
7. சதுர அணி என்றால் என்ன?
சதுர அடுக்கை எண்களாகக் கொண்டது. உச்சி இடப் பக்கத்திலிருந்து அடி வலப்பக்கம் வரையுள்ள மூலை விட்டத்திற்கு முதன்மை மூலை விட்டம் என்று பெயர். இம்முலை விட்டத்திலுள்ள உறுப்புகளின் தொகைக்குச் சுவடு (Spur) என்று பெயர்.
8. முக்கோண அணி என்றால் என்ன?
இது ஒரு சதுர அணி. இதில் எல்லா உறுப்புகளும் முதன்மை மூலவிட்டத்திற்கு மேலோ கீழோ இருக்கும். அப்பொழுது அவை சுழியாக இருக்கும்.இந்த அணியின் அணிக்கோவை அதன் மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்கற்பலனாகும்.
9. சுழிக்கோவையணி என்றால் என்ன?
ஒரு சதுரஅணி. இதற்கு அணிக்கோவை D. நேர்மாறல் அணி இல்லை.
10. நிரல் நிரைமாற்று அணி என்றால் என்ன?
ஒர் அணியின் நிரல்களையும் நிரைகளையும் மாற்றுவதால் உண்டாகும் அணி.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணியும் அணிக்கோவையும் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சதுர, என்ன, என்றால், உறுப்புகள், மூலை, முதன்மை, யாவை, அணிக்கோவை, அணியின்