சமையல் செய்முறை - தேங்காய் அல்வா
அசத்தலான மணத்துடனும் நல்ல சுவையாகவும் இருக்கும் தேங்காய் அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
தேவையான பொருள்கள்:
முந்திரி - 10 பருப்புகள் (2 மணி நேரம் ஊறவைக்கவும்)
பாதாம் பருப்பு - 10 (வெந்நீரில் ஊற வைத்துத் தோலுரிக்கவும்)
தேங்காய்த் துருவல் - 1/4 கப் (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - 1/2 கப்
திராட்சை - 6
செய்முறை:
* தண்ணிரில் ஊறிய பாதாம் மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.
* அரைத்த முந்திரி, பாதாம் கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேங்காய் விழுதையும் சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறிக் கொண்டிருங்கள்.
* கலவை கெட்டியாகி இறுகி வரும்போது உருக்கிய நெய்யை அதில் ஊற்றிக் கிளறுங்கள்.
* பிறகு கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கி, பாத்திரத்தில் எடுத்து வைத்துப் பரிமாறவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய் அல்வா - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - சேர்த்து, பாதாம், தேங்காய்