சமையல் செய்முறை - தேங்காய் பர்பி
மைக்ரோவேவ் உபயோகித்து மூன்றரை நிமிடங்களில் ருசியான தேங்காய் பர்பி செய்வது எப்படி? இதோ உங்களுக்கான செய்முறை.
தேவையான பொருள்கள்:
தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 3
முந்திரிப் பருப்பு - 8
சர்க்கரை - 1 கப்
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* தேங்காயை நைசாகத் துருவிக் கொள்ளவும்.
* ஏலக்காயையும், பச்சைக் கற்பூரத்தையும் சிறிது சர்க்கரையுடன் சேர்த்து, நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
* முந்திரிப் பருப்புகளைச் சிறுதுண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும்.
* எல்லாப் பொருள்களையும் நன்றாகக் கலந்து ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மூடாமல் வைக்கவும்.
* 3 1/2 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும். நடுவில் ஒருமுறை லேசாகக் கிளறிக் கொடுக்கவும்.
* மைக்ரோவேவிலிருந்து எடுத்த கையோடு, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமமாகப் பரப்பவும்.
* சிறிது சூடு ஆறத் தொடங்கியதும், நெய் தடவிய கத்தியால் 3 செ.மீ. சதுரக் கட்டிகளாக வெட்டவும்.
மூன்றரை நிமிடங்களில் தேங்காய் பர்பி தயார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய் பர்பி - Recipies - சமையல் செய்முறை - Ladies Section - பெண்கள் பகுதி - கொள்ளவும், செய்முறை, தேங்காய்