வயிற்று வலியால் துடித்தால்...
குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் நோய்களில் வயிற்று வலி முக்கியமானது. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், பேசும் திறன் படைத்த குழந்தைகளுக்கும் இந்நோய் சர்வ சாதாரணமாக வரலாம். வயிற்றில் உண்டாகும் ஒருவகை அமிலப் பொருள் குடலின் உட்புறத்தில் உள்ள மெல்லிய சவ்வில் எரிச்சலூட்டுவதால் வயிற்று வலி ஏற்படுகின்றது. சீரணக் குறைபாடுகளினால் குடலில் வாயுக்கள் அதிகமாக உற்பத்தியாவதால் வயிற்று வலி உண்டாகும். இதுதவிர வேறு ஏதாவது காரணத்தால் வயிற்றில் பாலை சீரணிக்க முடியாத நிலையிலும் வயிற்று வலி உண்டாகும்.
வயிற்று வலியால் துடிக்கும் குழந்தைகளை உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும். அதற்குமுன் குழந்தையினுடைய வயிற்றின் மீது டர்பன்டைன் எண்ணெய்யை லேசாக தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வலி குறைந்து குழந்தை நிம்மதியாக தூங்கும். மருத்துவரை பார்ப்பதற்கு தாமதமாகும் என்றால் ஒரு தேக்கரண்டி அளவு மில்க் ஆப் மெக்னீசியாவை நீரில் கலந்து புகட்டலாம். வயிற்று வலியினால் அவதிப்பட்ட குழந்தைக்கு சில மணி நேரம் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட வேண்டும்.
இத்தயை குழந்தைகளுக்கு கிளிசரினுடன் தண்ணீர் கலந்து எனிமா கொடுக்கலாம். அதனால் வாயுவும், மலமும் கழிந்து குழந்தைக்கு வயிற்று வலி குறையும். ஆனால் எக்காரணம் கொண்டும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பேதிக்கு மட்டும் மருந்து கொடுக்கக் கூடாது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வயிற்று வலியால் துடித்தால்..., வயிற்று, உண்டாகும், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி