விலங்கியல் :: சூழ்நிலையியல்
11. எழுச்சி என்றால் என்ன?
ஒரு விலங்கின் நடத்தைத் துண்டல் விழிப்புக்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருத்தல்.
12. உயிர்நலம் என்றால் என்ன?
இது ஒரு விலங்கின் நடத்தை. இது அதன் பிழைப்பு வாய்ப்புகளையும் இனப்பெருக்க வாய்ப்புகளையும் குறைப்பது. ஆனால், அதன் இனத்தைச் சார்ந்த மற்றொரு விலங்கில் அவை அதிகமாகும். காட்டாக, ஆட்காட்டிக் குருவி ஒன்று தின்னும் பறவை ஒன்றைக் கொத்துவது போல் பாவனை செய்து, தன் கூட்டிலிருந்து விரட்டுவதன் மூலம் தன் குஞ்சுகளைக் காப்பாற்றும்.
13. நடத்தை என்றால் என்ன?
ஒர் உயிரியின் பலதிறப்பட்ட செயல்களைக் குறிப்பது. இதில் உடற்செயல்களும் உளச்செயல்களும் அடங்கும். இதில் தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகிறது.
14. நடத்தை மரபணுவியல் என்றால் என்ன?
உயிரி நடத்தை பற்றி ஆராயும் மரபணுவியலின் ஒரு பிரிவு.
15. தணிப்பு நடத்தை என்றால் என்ன?
ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் வலுத்தாக்கலை நிறுத்தும் நடத்தை காட்டாக, வலுவுள்ள நாயிடம் வலு வில்லாத நாய் நயந்தும் குழைந்தும் வாலை ஆட்டுதல்.
16. வலுத்தாக்கல் என்றால் என்ன?
ஒருவகை விலங்குநடத்தை. பிறவிலங்குகளை அச்சுறுத்த வும் எதிர்க்கவும் நடைபெறுவது. இது எதிர்ப்புக்குரிய துலங்கலே, எ-டு. புலி, சிங்கம்.
17. ஆழிட வாழ்விகள் என்றால் என்ன?
ஏரி அல்லது கடலடியில் வாழும் தாவரத்தொகுதிகளும் விலங்குத் தொகுதிகளும் ஆகும். எ-டு இயக்கமற்ற விலங்குகள் தவழ்ந்தும் வளைதோண்டியும் வாழ்பவை.
18. வேலை ஒப்புமை என்றால் என்ன?
உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்ட தாக இருத்தல். எ-டு பறவைச் சிறகுகளும் பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டும்; தோற்றத்தில் இல்லை.
19. வேலை ஒப்புமை உறுப்புகள் என்றால் என்ன?
வேலையில் உறுப்புகள் ஒத்திருத்தல். எ-டு. பறவைச் சிறகுகளும் பூச்சி சிறகுகளும்.
20. பகற்சுறுசுறுப்பு என்றால் என்ன?
பகற்பொழுதில் செயலாக்கம் மிகுதியாக இருத்தல். எ-டு. தேனிக்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூழ்நிலையியல் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நடத்தை, சிறகுகளும், விலங்கின், இருத்தல்