இயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 3
21. அணு வெப்பம் என்றால் என்ன?
ஒரு தனிமத்தின் வெப்ப எண், அணு எடை ஆகிய இரண்டின் பெருக்கத் தொகை.
22. அணுக்கரு என்றால் என்ன?
அணுவின் மையப் பகுதி. முன்னணுவும் அல்லணுவும் கொண்டது. அணு ஆற்றலை அளிப்பது.
23. அணுக்கருவைக் கண்டறிந்தவர் யார்?
ரூதர்போர்டு, 1911.
24. அணு எண் என்றால் என்ன?
ஒரு தனிமத்தின் அல்லணுக்களைச் சுற்றிச் சுழலும் மின்னணுக்களின் எண்ணிக்கை. வேறு பெயர் முன்னணு எண்.
25. ஒரு தனி அணுவின் புகைப்படம் எப்பொழுது முதன்முதலில் வெளியிடப்பட்டது?
1980இல் ஜெர்மன் எய்சன்பர்க் பல்கலைக்கழகத்தில்
வெளியிடப்பட்டது.
26. அணு பற்றி ஆராய்ந்தவர் யார்?
மோஸ்லி, 1914.
27. அணுக்கரு காந்த ஒத்ததிர்வு (NMR) என்றால் என்ன?
ஓர் அணுக்கருவால் தகுந்ததும் உரியதுமான அதிர் வெண்ணில் மின்காந்தக் கதிர்வீச்சு உறிஞ்சப்படுகிறது. இப்பொழுது புறக்காந்தப் புலத்தில் சுழியிலாக் காந்தத் திருப்புத்திறன் உண்டாகும்.
28. ஆஃபா நெறிமுறை என்றால் என்ன?
அணு ஆற்றல் மட்டங்கள் மின்னணுக்களின் ஆற்றல் வரிசைக்கு ஏற்ப நிரம்புகின்றன.
29. ஆகர் விளைவு என்றால் என்ன?
அணுவிலிருந்து மின்னணு வெளியேறும் நிகழ்ச்சி.
30. மாறுநிலை நிறை என்றால் என்ன?
அணு வினையில் தொடர் வினையினை நிலை நிறுத்தத் தேவைப்படும் பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு மாறுநிலை நிறையாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 9 | 10 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அணு இயற்பியல் - பக்கம் - 3 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்