முதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 4
இயற்பியல் :: காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 4
31. பனி என்றால் என்ன?
குளிர்ந்த பரப்பில் காற்றிலிருந்து நீர்த்துளிகள் சுருங்குதல் காற்று வெப்பநிலை நீரின் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்போது, காற்று நீராவி படிகமாக உறைவது.
32. பனிநிலை என்றால் என்ன?
காற்றிலுள்ள நீராவி நிறைவுறும் வெப்பநிலை. வெப்பநிலை குறையும்பொழுது இந்நிலையில் நீராவி குளிர்ந்து நீர்த்துளிகள் ஆகும்.
33. ஈரநிலைமானி என்றால் என்ன?
காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்குங் கருவி.
34. ஈரநிலைநோக்கி என்றால் என்ன?
காற்று ஈரப்பதத்தில் உண்டாகும் மாற்றங்களைக் காட்டுங் கருவி.
35. பனிநிலை ஈரநிலைமானி என்றால் என்ன?
பனிநிலையை உறுதி செய்யுங் கருவி.
36. இது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?
இதில் ஆவி குளிர்ச்சி செய்யப்படும் பொழுது, அது எவ்வெப்ப நிலையில் சுருங்குகிறதோ அவ்வெப்ப நிலையை அளந்து இதை உறுதி செய்யலாம்.
37. ஈரநிலை என்றால் என்ன?
ஈரப்பதம். காற்றுவெளியில் நீராவியின் செறிவு இது.
38. இதன் வகைகள் யாவை?
1. தனி ஈரநிலை,
2. ஒப்புஈரநிலை.
39. தனி ஈரநிலை என்றால் என்ன?
ஓரலகு காற்றுப் பருமனிலுள்ள நீராவியின் நிறை.
40. ஒப்பு ஈரநிலை என்றால் என்ன?
காற்றிலுள்ள ஈரத்திற்கும், ஒரே வெப்பநிலையிலும் அழுத்தத்திலும் காற்று நிறைவுறுமானால் அதில் அப்பொழுதுள்ள ஈரத்திற்குமுள்ள வீதம். இது விழுக்காடாகத் தெரிவிக்கப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காற்று வெளியும் வானிலையும் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, ஈரநிலை, காற்று, உறுதி, கருவி, நீராவி, வெப்பநிலை, காற்றிலுள்ள