மருத்துவம் :: முதன்மை மருத்துவத் துறைகள்
21. நரம்பு அறிவியல் என்றால் என்ன?
நரம்பு மண்டல மருந்தியல், உயிர் வேதி இயல், உடலியல், உட்கூறியல், கருவியல் ஆகிய நிலைகளை ஆராய்தல்.
22. நரம்பு - கண்ணியல் என்றால் என்ன?
கண்தொடர்பான நரம்பு மண்டலம் பற்றி ஆராயுந் துறை.
23. மகளிர்நோய் இயல் என்றால் என்ன?
பெண்கள் பிறப்பு வழியில் உண்டாகும் நோய்களை ஆராயுந்துறை.
24. குழந்தை மருத்துவம் என்றால் என்ன?
குழந்தையின் வளர்ச்சி, பாதுகாப்பு, குழந்தை நோய், அந்நோயைப் போக்குதல் ஆகியவற்றை ஆராயுந்துறை.
25. மூப்பியல் என்றால் என்ன?
மூப்புச் சிக்கல்கள், மூப்பு நோய்கள் பற்றி ஆராய்வது.
26. பதிய அறிவியல் என்றால் என்ன?
உடல் உறுப்புகளை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றிப் பொருத்துதலை ஆராயும் புதிய துறை.
27. கருவியல் என்றால் என்ன?
கருநிலையில் தனி உயிர் வளர்ச்சி பற்றிப் பல நிலைகளில் ஆராயுந் துறை.
28. மருந்தியல் என்றால் என்ன?
மருந்துகளின் இயைபு, உற்பத்தி, பயன்கள் முதலியவை பற்றி ஆராயுந்துறை.
29. உளநோய் மருத்துவம் என்றால் என்ன?
உளநோய்கள் தடுப்பு குணப்படுத்தல் முதலியவை பற்றி ஆராய்வது.
30. உணர்வகற்றியல் என்றால் என்ன?
உணர்வகற்றல், உணர்வகற்றிகள் ஆகியவை பற்றி ஆராய்வது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதன்மை மருத்துவத் துறைகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பற்றி, நரம்பு, ஆராய்வது, துறை, ஆராயுந்துறை