மருத்துவம் :: உள்ளம்
21. தனியாளுமை என்றால் என்ன?
இது உள்ளம், ஆளுமை, பண்பு முதலியவற்றில் வெளிப்படுவது. ஐன்ஸ்டின் தனியாளுமை சமூகத்திற்குப் பயனளித்துள்ளது. இட்லரின் தனியாளுமை சமூகக் கேட்டை விளைவித்தது.
22. வெளிப்பாடு என்றால் என்ன?
எண்ணங்கள், கருத்துகள், உணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விடுபட அவற்றைப் பிறருக்கு மாற்றுதல். எ-டு தன் பழியைப் பிறர் மீது சுமத்துதல்.
23. வெளிப்பாட்டுக் குறை என்றால் என்ன?
எழுத்தில் சொற்களை அமைத்துக் கருத்துக்களைத் தெரிக்க இயலாமை.
24. வெளிப்பாட்டு நுணுக்கள் என்றால் என்ன?
மைத் தடங்கள், படங்கள், வடிவங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஆளுமையை ஆராயும் முறைகள். இம்முறைகளில் பயன்படுவனவற்றைத் தத்தம் ஆளுமைப் பண்புகளுக்கேற்ப ஒவ்வொருவரும் பொருள் கொள்வர்.
25. மறத்தல் என்றால் என்ன?
கற்றவை நினைவிலிருந்து நீங்குவதைக் குறிக்கும். மறப்பது உள்ளத்தின் இயல்பு. நல்ல சூழ்நிலைகளில் கற்பவை உள்ளத்தால் நிலைத்து நிற்கும். நினைவுப் பயிற்சி, நினைவுக் குறிப்புகள் மூலம் மறதியைப் போக்கலாம்.
26. நினைவாற்றல் என்றால் என்ன?
பழைய பட்டறிவுகளைப் புது நிலைகளில் பயன்படுத்தும் திறன். கற்றல் நினைவிலிருத்தல், நினைவு கூரல், நினைவுணர்தல் ஆகியவை இதில் அடங்கும். நினைவாற்றலும் உள்ளத்தின் ஒர் இயல்பு.
27. மிகை நினைவாற்றல் என்றால் என்ன?
நினைவாற்றலை மிகைப்படுத்துதல். பழங்காலப் பட்டறிவின் துணுக்கமான விவரங்களும் இதில் அடங்கும். அதிர்ச்சிக்குப்பின் உடல் நலம் குன்றுபவர்களுக்கு ஏற்படுவது.
28. நினைவு கூர்தல் குறை என்றால் என்ன?
பொருள்களைப் பெயரிடவும் நினைவுகூர இயலாத நிலை.
29. நினைவிலிருத்தல் என்றால் என்ன?
பெற்ற செய்தியினை மறைநிலையில் நீண்ட காலம் இருத்தி வைத்தல்.
30. இதை எவ்வாறு மதிப்பிடலாம்?
மீளாக்கம், நினைவுணரல், மீண்டும் மீண்டும் செய்தல் ஆகிய நினைவுக் குறிப்புகள் தொடர்பான செயல்களை உற்றுநோக்கி இதனை மதிப்பிட வேண்டும். இது செறிவாக இருந்தால்தான், கற்றலும் செறிவாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உள்ளம் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், தனியாளுமை