மருத்துவம் :: நுண்ணுயிரிகள்
21. இதில் அடங்குவன யாவை?
பூஞ்சணம், காளான், ஈஸ்டு.
22. பூஞ்சையின் சிறப்பென்ன?
புரதங்களும் வைட்டமின்களும் அடங்கியது. ரொட்டி செய்தலிலும் குடிமம் வடிப்பதிலும் பயன்படுதல். பெனிசிலின் பூஞ்சையிலிருந்தே செய்யப்படுகிறது. சில பூஞ்சைகள் நோய்களையும் உண்டாக்குபவை.
23. கிராம் கறை எத்தனை வகைப்படும்?
இரு வகைப்படும்.
24. கிராம் நேர் நுண்ணுயிரி என்றால் என்ன?
செந்நிற எதிர்க்கறையாலும், நிறம் நீக்கியாலும் பாதிக்கப்படாமல் ஊதாநிறக் கறையை நிலைக்க வைத்திருக்கும் குச்சி வடிவ உயிரி. எ-டு. ஸ்டேபிலோ காக்கை.
25. கிராம் எதிர் நுண்ணுயிரி என்றால் என்ன?
கிராம் கறையோடு சேர்க்கும் பொழுது எதிர்க்கறை யோடு சேர்ந்து நிறமற்றதாக்கும். எ-டு. சால்மனல்லா.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நுண்ணுயிரிகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கிராம்