புவியியல் :: எரிமலை
41. எரிமலை வெடிக்கும் பொழுது வெளிவருவன யாவை?
நச்சுப்புகை, எரிமலைச் சாம்பல், பழுக்கக் காய்ச்சிய இரும்பு, வெப்பத்திலுள்ள எரிமலைக் குழம்பு மற்றும் கந்தக வளிகள்.
42. எரிமலை இயக்கத்தின் இருவகைகள் யாவை?
1. வெடிப்பியக்கம்
2. பாறை இயக்கம்.
43. வெடிப்பியக்கத்தை விளக்குக.
இதில் பாறைக் குழம்பும் வலுவான வளிகளும் வெளிப்படும். வளிகள் எரிமலைத் திறப்பிலிருந்து ஒரு பீச்சு போல் வெளியேறும். அது மிதப்புச் சுடராகும். இதில் காற்று சேர்ந்து வெப்பம் பெறும். இறுதியாக அது குடை போன்று முகிலாகப் பரவும். இப்பொழுது எரிமலைக் கலவையின் அடர்த்தி, சுற்றியுள்ள காற்றின் அடர்த்தியைச் சமன் செய்யும்.
44. பாறை இயக்கத்தை விளக்குக.
இது வெப்ப இடங்களோடு தொடர்புள்ளது. வெடிப்புகள் கடுமை குறைந்தவை. பாறைக் குழம்பு பாகுத்தன்மை குறைந்திருக்கும்.
45. வெடிப்பதற்கு முன்பு எரிமலைகள் உப்புவது எதைக் காட்டுகிறது?
குறைந்த ஆழங்களிலுள்ள பாறைக்குழம்புத் தேக்கத்தின் அதிக அழுத்தத்தைக் காட்டுவது.
46. என்ஜிஆர்எல் என்பதென்ன?
தேசியப்புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் (National Geophysical Research Laboratory) என்பது இதன் பொருள்.
47. இது மேற்கொண்டிருக்கும் திட்டமென்ன?
மேற்கு இந்தியாவில் எரிமலை இயக்கப் பாறைகளின் எண்ணெய் வளங்களை ஆராய ஒரு திட்டத்தைச் செயற்படுத்த மேற்கொண்டுள்ளது.
48. இத்திட்டத்திற்கு நிதி வழங்குபவை எவை?
எண்ணெய் மற்றும் இயற்கைவளி ஆணையம், (ONGC) இந்திய எண்ணெய் வளர்ச்சி வாரியம் (OIDE) ஆகியவை நிதி வழங்குபவை.
49. காந்த வழித் துருவுமியல் (magneto-telluric) என்றால் என்ன?
இது ஒர் ஆற்றல் வாய்ந்த புவி இயற்பியல் நுணுக்கமாகும்.
50. எதன் அடிப்படையில் இது அமைந்துள்ளது?
புவி மேற்பரப்பிலுள்ள கதிரவன் தோற்ற மின்காந்தக் குறிபாடுகளை அளப்பதின் அடிப்படையில் அமைந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரிமலை - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - எண்ணெய், எரிமலை