வேதியியல் :: கரிம வேதியியல்
31. அசூரைட் என்றால் என்ன?
இயல்பான அடிப்படைச் செம்புக் கார்பனேட்டு. நீலநிறம். ஒவியர் நிறமாகப் பயன்படுதல்.
32. லேனோலின் என்றால் என்ன? பயன்கள் யாவை?
கம்பள மசகிலிருந்து கிடைக்கும் மெழுகு போன்ற பொருள். பூச்சி மருந்துகளிலும் ஒப்பனைப் பொருள்களிலும் பயன்படுவது.
33. அனிசோல் என்றால் என்ன?
நறுமணமும் நிறமற்றதுமான நீர்மம். நறுமணப் பொருள்களில் பயன்படுவது.
34. ஸ்கேட்டோலின் பயன் யாது?
கரையக் கூடிய வெண்ணிறப்படிகம். நறுமணப் பொருள்கள் செய்ய.
35. பயனுறுகொழுப்புக் காடிகள் என்றால் என்ன?
உணவில் இயல்பாக இருக்க வேண்டிய கொழுப்பு அமிலங்கள். எ-டு லியோலிகக்காடி.
36. கொழுப்புகள் என்றால் என்ன?
கரி, அய்டிரஜன், ஆக்சிஜன் ஆகிய மூன்று தனிமங்களையுங் கொண்ட சேர்மங்கள். எ-டு எண்ணெய், நெய். உடலுக்கு ஆற்றல் அளிப்பவை.
37. இவற்றின் வகைகள் யாவை? எவை அதிகம் பயன்படுகின்றன?
1. தாவரக் கொழுப்புகள் - தேங்காய் எண்ணெய்.
2. விலங்குக் கொழுப்புகள் - நெய்.
தாவரக் கொழுப்புகள் அதிகம் பயன்படுகின்றன.
38. கொழுப்புக் காடிகள் என்பவை யாவை?
கரிமச் சேர்மங்கள். எ-டு பால்மாட்டிகக் காடி.
39. மெழுகு என்பது யாது?
கரையாத கொழுப்புவகை. உயிரியைப் பாதுகாக்கப் பயன்படுவது. எ-டு வெண்மெழுகு. வத்திகள் செய்யவும்.
40. வெண்மெழுகு என்றால் என்ன?
தேன்மெழுகிற்கு மாற்றாக வண்ணங்களிலும் மெழுகுகளிலும் பயன்படுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கரிம வேதியியல் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, பயன்படுவது, கொழுப்புகள், யாவை