தாவரவியல் :: வேர்
11. வேற்றிட வேர்கள் என்றால் என்ன?
இயல்பான இடத்திலிருந்து அல்லாமல் வேறு இடத்தில் வளரும் வேர்கள். ஆலம் விழுது தண்டிலிருந்து தோன்றுவது.
12. வேற்றிட வேர்த்தாவரங்களுக்கு சில எடுத்துக் காட்டுகள் தருக.
1. கொத்துவேர் - தண்ணீர்விட்டான்கிழங்கு
2. முடிச்சு வேர் - மாங்காய் இஞ்சி.
3. பற்று வேர் - மரத்தாழை.
4. மூச்சுவேர் - கண்டல்.
5. முட்டுவேர் - தாழை.
6. ஒளிச்சேர்க்கை வேர் - டேனியோபில்லம்.
13. வேர்முண்டு என்பது யாது? இதன் சிறப்பென்ன?
அவரைக் குடும்பத் தாவரங்களில் வேர்முண்டுகள் உண்டு. இவற்றில் குச்சி வடிவ உயிர்கள் வாழ்ந்து நைட்ரஜன் கூட்டுப் பொருளை உண்டாக்குகின்றன. தங்களுக்கு வேண்டிய மாப்பொருளைத் தாவரத்திலிருந்து பெறுகின்றன. எ-டு. ரைசாபியியம் என்னும் குச்சி வடிவ உயிரி.
14. குடிநீருக்கு நறுமணமளிக்க அதில் போடும் வேர் யாது?
விளாமுச்சி வேர்.
15. தலையில் அணிந்து கொள்ளக்கூடிய வேர் எது?
வெட்டி வேர்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேர் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வேர்