தாவரவியல் :: தாவர உயிரி தொழில்நுட்பவியல்
21. இத்தேசிய அறிவுரைக்குழுவை அமைத்தவர் யார்?
வேளாண் அறிஞர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.
22. உயிரிகொள்ளை என்பது என்ன?
ஒரு நாட்டுக்கே சொந்தமான ஒரு பயிரை அல்லது அதன் பொருளை மற்றொரு நாடு தனதாக்கிக் கொண்டு ஆதாயம் பெறுதல். எ-டு. வேம்பும் அதன் பொருளும்.
23. கொல் தொழில்நுட்பம் (terminator technology) என்றால் என்ன?
மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம். பெறும் மரபணு மாற்றம் ஒரு பயிர் இயல்பாக வளர வாய்ப்பளிக்கும். ஆனால், அதன் விதைகள் முளைப்பதைத் தடுக்கும். இது ஒரு கொடுமையான தொழில்நுட்பம். இது உலகில் ஒரு சில பெரும்புள்ளிகளின் கைகளில் உள்ளது.
24. உயிரிவேற்றுமை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அமைப்புகள் யாவை?
இந்திய விலங்கியல் அளவையகம், இந்தியத் தாவரவியல் அளவையகம், இந்தியக் காட்டியல் அளவையகம்.
25. உயிரிவேற்றுமைப் பேரவையின் நோக்கமென்ன?
1992இல் உலக அளவில் ரியோ புவி உச்சிமாநாட்டில் 150 நாடுகள் கலந்து கொண்டன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. உயிர் வேற்றுமையைப் பாதுகாப்பது இப்பேரவையின் நோக்கம்.
26. இந்திய காட்டுயிர்ப் பாதுகாப்பு நிறுவனம் செய்துள்ள அரும்பணி யாது?
இந்தியாவை 10 உயிரி மண்டலங்களாக 1992 இல் பிரித்தது.
27. அம்மண்டலங்கள் யாவை?
1. இமாலயப் பகுதிகள்
2. இமாலயக் கடப்புப் பகுதிகள்
3. பாலைவனம்
4. மேற்குத் தொடர்ச்சி மலை
5. தக்காணப்பகுதி
6. கங்கைச் சமவெளி
7. வட - கிழக்கு இந்தியா
8. அரைவறட்சிப் பகுதிகள்
9. தீவுகள்
10. கடற்கரைகள்.
28. இந்தியாவில் ஓர் உயிரியல் சிறப்பு யாது?
உயிரி வேற்றுமைக்கு நிலைக்களமாக உள்ளது.
29. இந்தியாவிலுள்ள மாவடைகளும் மரவடைகளும் யாவை?
விலங்கினங்கள் 75,000. தாவர இனங்கள் 45,000.
30. நுண்ணுயிர் மாசு என்றால் என்ன?
உயிர்த் தொழில் நுட்ப இயலின் விளைவு. தீங்குதரும் நுண்ணுயிர்களை வடிவமைத்து அவற்றைக் கொண்டு உயிர்களிடையே நோய்களை உண்டாக்கலாம். நீரை மாசுபடுத்தலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாவர உயிரி தொழில்நுட்பவியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - பகுதிகள், அளவையகம், யாவை, இந்திய, என்ன