பெண்களும் நவீன நாகரீக உடைகளும்...
கல்லுரியில் பெண்களுக்கிடையே பிரபலமாகியிருக்கும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் சுருக்கம் செய்யப்பட்ட க்ரிங்கில்டு துணியில் தைக்கப்பட்ட நீளமான பாவாடைகள்தான். பழங்காலத்தில் பெண்கள் அணிந்து வந்த அதே பாவாடை சட்டைதான். இப்போது மேலே சட்டைக்குப் பதிலாக மாடர்ன் டாப்ஸ். ஷாட் அல்லது டி.ஷர்ட் போலவோ போட்டுக் கொள்ளலாம்.
கடைகளிலும் இந்த ''செட்'' கிடைக்கிறது. பாதம் தொடும் நீளமான, அதிகம் பிரில்களைக் கொண்ட இந்தப் பாவடையில் கீழே கோல்டன் பார்டர் வரும்படி டிஸைன் செய்து கொள்வது இன்னும் அழகு. கிரிங்கில்டு, ஜார்ஜெட், ஷிஃபான் போன்ற மெட்டீரியல்களில் இந்த நீளமான ஸ்கர்ட்ஸ் கிடைக்கிறது. இந்த பாவடைகளுக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் மாடர்ன் டாப்ஸ் போடும்போது புதுமையான லுக் கிடைக்கிறது.
ஸ்கார்ஃப்கள் கூட இப்போது கல்லூரிப் பெண்களுக்கிடையே பிரபலமாகி வருகிறது! ஜீன்ஸ், டி.ஷர்ட் அல்லது ''ஸ்கர்ட், டி.ஷர்ட்'' உடுத்தும் போது டி.ஷர்ட்டின் மேலே இந்த ஸ்கார்ஃப்களை போட்டுக் கொண்டால் ஸ்டைலாக இருக்கும்! இப்போது சுடிதார்களுக்கே துப்பட்டாவை தவிர்த்துவிட்டு ஸ்கார்ஃப்களை அணிகிறார்கள் நிறையப் பெண்கள்.
இதற்கு புதுசாகத்தான் துணி வாங்கி தைத்துக் கொள்ள வேண்டுமென்றில்லை. உங்களிடம் உள்ள பழைய உடைகளையே புதுமையாக டிஸைன் செய்தும் உடுத்திக் கொள்ளலாம். ஒரு சுடிதாரின் பைஜாமாவை எடுத்துக்கொண்டு வேறொரு சுடிதாரின் டாப்ஸை பொருத்தமாகத் தேர்வு செய்து அணியலாம். இவ்வாறு உங்களிடம் உள்ள ட்ரஸ்களையும், நிறங்களையும் கலந்து, பொருத்தமாக அணிந்து கொள்ளச் சொல்லுங்கள். மாடர்ன் உடையையும் பாரம்பரிய உடையையும் கலந்து அணிந்து பார்க்கச் சொல்லுங்கள். இப்போது ஜீன்ஸ், மேல சுடிதார் என்பது கேஷ•வலான உடையாகிவிட்டது!
புதுமையான டிஸைன்களை நீங்களே உருவாக்கினால், ''ஆஹா! இந்த ட்ரஸ் ரொம்ப நல்லா இருக்கே'' என்று மற்றவர்கள் உங்களைப் பின்பற்றுவார்கள்!
பார்ட்டிகளில் பல விதங்கள் இருக்கின்றன. இடத்திற்கு தகுந்தாற்போல பார்ட்டிகளுக்கு ட்ரஸ் செய்து கொள்ளுக்ஙள். இரவு டின்னருடன் இணைந்த காக்டெயில் பார்ட்டிகளுக்கு இந்தியன் மற்றும் மேல்நாட்டு நாகரீக ஸ்டைலில் உடை உடுத்தி அளவான மேக் அப்பில் டிரஸ் பண்ணிக் கொள்ளுங்கள். இதுபோன்ற பார்ட்டிகளுக்கு நூறு சதவீதம் பொருத்தமான உடையென்றால் பல வண்ணங்களில் கிடைக்கும் ஃபேன்ஸி சேலைகள்தான்.
நீங்கள் மாடர்ன் உடை அணிபவராக இருந்தால், ராப்பரௌன்ட்ஸ், பேண்ட்கள் போன்றவற்றை அணியலாம். காக்ரா சோளிகூட இதுபோன்ற பார்ட்டிகளுக்கு ஒரு கச்சிதமான உடைதான். இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், சேலைகளையே புதுவகையாக அணியலாம்.
நல்ல கிராண்டான சேலையை வழக்கமான முறையில் அணிந்துகொண்டு கூடுதலாக ஒரு துப்பட்டாவை வலதுபக்க தோள் பட்டையில் ஒற்றையாக போட்டுக் கொள்வதுதான் லேட்டஸ்ட் ஃபாஷன். சேலைக்கு இரண்டு முந்தானை போல் இது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
காக்ரா சோளி ''செட்''டை அணிந்து கொண்டு துப்பட்டாவுக்கு பதில் சேலையை உங்கள் இடுப்பின் இரு பக்கங்களிலும் ஃப்ளீட் வைத்துச் செருகி. இரு முந்தானைகளையும் (உங்கள் பின்புறம் X வரும்படி.) எடுத்து உங்கள் இரு தோள்பட்டைகள் வழியாகப் போட்டுக் கொள்ளவேண்டும்! இது காக்ரா சாரி என்றழைக்கப்படும்.
அந்த பார்ட்டியில் உங்களை மென்மையாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், பிங்க், நீலம் ஆகிய நிறங்களில் ஆடைகள் அணியுங்கள், கொஞ்சம் கவர்ச்சியாக என்றால் ஷைனிங் (ஜிகுஜிகு) ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள் கும்பலில் நீங்கள் பளிச்சென்று தெரிய விரும்பினால், சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற கலர் ஆடைகளை உடுத்தலாம். நம் பண்பாடுதான் எல்லாவற்றையும்விட அழகு என்று எண்ணினால், எந்த வகையான பார்ட்டிகளுக்கும் நமது பாரம்பரிய பட்டுசேலைகள் உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தி வரும்.
ப்ளெய்ன் புடவைகளைப் ஃபாஷனாக மாற்ற....
ப்ளெயின் சேலைகள் ஜார்ஜெட், நைலான், ஷிஃபான், க்ரேப் சில்க் போன்ற வகையில்தான் பெரும்பாலும் கிடைக்கும். வேலைப்பாடுகள் செய்த ப்ளெயின் புடவைகளைத்தான் இப்போது ஃபேன்ஸி சேலைகள் என்று அழைக்கிறோம். இதுதான் இப்போதைய ஃபாஷன்!
ஜார்ஜெட் சேலைகள் எனில், மெல்லிய வண்ண நூல்களால் த்ரட் வொர்க் செய்யலாம். ஜார்ஜெட் புடவைகளில் நூல் வேலைப்பாடுகளைத்தான் சுலபமாகப் பின்ன முடியும். ஷிஃபான் சேலைகளில் கண்ணாடி சேலைப்பாடுகள் செய்தால் ரொம்ப க்ராண்டாக இருக்கும். விலையுயர்ந்த க்ரேப் சில்க் புடவைகளில் தங்கம், வெள்ளி நிற ஸ்பிரிங்குகளை பொருத்தி டிஸைன் செய்வதுதான் பார்ப்பதற்குச் சிறப்பாக இருக்கும்! இந்த ஸ்பிரிங்குகள் பல நிறங்களிலும் கிடைக்கும். இருப்பினும் பட்டுப் புடவைகள் எனில் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஸ்பிரிங்குகள்தான் ஒரு ரிச்லுக் கொடுக்கும்! கொஞ்சம் டல்லாக இருக்க வேண்டுமென்றால் பீட்ஸ் வைத்துக் தைத்துக் கொள்ளலாம்.
ஷர்ட் டாப்ஸ்களை ஃபிரில்கள் வைத்துக் தைத்துக் கொண்டால் பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும். முட்டி வரைக்கும் நீளமாக இருக்கும் ஷார்ட் டாப்ஸ்களுக்கு குர்தா என்று பெயர். அதையே இன்னும் கொஞ்சம் சிறிதாக்கினால் ''குர்தி'' என்று பெயர்.
குர்தாவைவிட குர்திதான் கல்லூரி செல்லும் மாணவிகள் மத்தியில் இன்று ஃபேஷன் இந்த குர்தியை உங்கள் மகள், தனது ஜீன்ஸ் பேண்ட் மீது போட்டுக் கொண்டால் மாடர்னாகவும் அதேசமயம் டீஸன்டாகவும் இருக்கும். பேரலால் பேண்ட் மீதும் போட்டுக்கொண்டு துப்பட்டா போட்டுக் கொண்டால், இது ஒரு புது டிஸைனாகிவிடும்.
உங்களிடம் ஸ்கர்ட்கள் இருந்தால், அதன் மேல் கூட உடுத்திக் கொள்ளலாம். இந்தக் குத்ரியை புதிதாகத்தான் வாங்க வேண்டுமென்று இல்லை! போரடித்துப் போன பழைய நீளமான சுடிதார்களையே குர்தாவாகவும் குர்தியாகவும் தைத்துக்கொண்டால் பணமும் மிச்சமாகும். பிரிண்ட் பேண்ட், பிரிண்டட் துப்பட்டா ப்ளெயின் குர்தி போட்டால் ஒரு புது மாதிரியான காம்பினேஷனாக இருக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெண்களும் நவீன நாகரீக உடைகளும்..., இருக்கும், போட்டுக், இப்போது, நீளமான, பார்ட்டிகளுக்கு, உங்கள், ஜார்ஜெட், கொண்டால், ஷர்ட், அணிந்து, மாடர்ன், கொள்ளலாம், காக்ரா, கிடைக்கும், என்றால், பேண்ட், ப்ளெயின், சேலைகள், கொஞ்சம், உடுத்திக், ஷிஃபான், கிடைக்கிறது, செய்து, ஜீன்ஸ், தைத்துக், டிஸைன், உங்களிடம், அணியலாம், Women Articles, மகளிர் கட்டுரைகள், Ladies Section, பெண்கள் பகுதி