வாளிப்பான தொடை பெற

பெண்களின் தொடைப்பகுதிகள் ஆடைகளால் மறைக்கப்பட்ட நிலையில் தானே இருக்கின்றன. அதை போய் யாராவது அழகு படுத்துவார்களா? என்று கேட்டு விடாதீர்கள்.
ஒரு பெண் என்னதான் மகா பேரழகியாக இருந்தாலும் தொடைகள் அளவாயின்றி பெருத்திருக்குமானால் அவளது அழகு பாதிக்கபடுகிறது. உயரம் குறைவானது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுகிறது. பிள்ளைகளைப் பெற்ற பெண்களும் சல்வார் கமீஸ் என்னும் வடநாட்டு அலங்காரத்தைப் பின் பற்றத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் சீரான தொடைகள் அமையா விட்டால் கால்களை அகல வைத்து நடக்க நேரிடுகிறது.
அழகிய தொடைகள் பெறப் பயிற்சிகள் மிக உதவுகின்றன. பெண்கள் காலை வேளையில் வாக்கிங் போவது நல்லது. நடக்கும் போது சற்றே வேகமாக நடந்தால் தான் உடலில் விறுவிறுப்பு ஏற்படும். சற்றே வியர்த்து உடல் சுறுசுறுப்படையும். நடக்கும் போது பேசிக்கொண்டே போகக் கூடாது. கைகளைத் தளரவிட்டு நடக்கப்பழக வேண்டும்.
கூடுமானவரை ஒரு நேர்கோட்டை மனதில் கற்பனை செய்து அதன் மீது நடப்பதாக பாவிக்க வேண்டும். அப்படிப் பழகினால் நடையில் தடுமாற்றம் ஏற்படாது. இப்பயிற்சியினால் தொடைகள் நல்ல வடிவு பெறும்.
பெண்கள் தரையில் மல்லாந்து படுத்து உள்ளங்கைகள் தரை நோக்கி இருக்க கால்கள் இரண்டும் இணைந்திருக்கும் படி செய்ய வேண்டும். பின்பு மெல்ல இருகால்களையும் தரையின் 2 அடி வரைதூக்க வேண்டும். பிறகு இருகால்களையும் இரண்டடி அளவிற்கு அகல விரிக்க வேண்டும்.
இப்படி நான்கைந்து முறை கால்களை விரிந்து வேர்த்த பின் சம தரைக்குக் கொண்டு வந்து பின்னர் மீண்டும் கால்களை உயரத்தூக்கி கொண்டு வந்து பின்னர் மீண்டும் கால்களை உயரத்தூக்கி இதே பயிற்சியைச் செய்ய வேண்டும். பத்து முதல் இருபது வரை செய்து வந்தால் தொடைகள் மெலிந்து அழகு கிடைக்கும்.
பெண்கள் வீட்டில் இருந்தபடியே சைக்கிள் ஓட்டலாம். நின்ற இடத்திலேயே ஓட்டக்கூடிய சைக்கிளில் தினமும் அரை மணி நேரம் பயிற்சியைச் செய்து வந்தால் தேவையற்ற சதை குறைவதுடன் தொடைகளின் அழகும் பெருகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாளிப்பான தொடை பெற, வேண்டும், தொடைகள், கால்களை, செய்து, அழகு, பெண்கள், Beauty Tips, அழகுக் குறிப்புகள், Ladies Section, பெண்கள் பகுதி