தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
கி.பி.1760 ஏப்பிரல் 4
பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்
கி.பி.1761
புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கி.பி.1761
திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினான். 1761-ல் தோற்கடிக்கப்பட்டான்.
கி.பி.1761
சகவீர பாண்டியன் மகன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் முப்பதாவது வயதில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மருது பாண்டியர்களுடன் நல்லுறவில் இருந்தார்.
கி.பி.1795-1799
பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.
கி.பி.1799
திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
கி.பி.1799
செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மன் மேஜர் பார்னனுக்கு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை காட்டில் மறைந்திருந்தான். காலப்பூர் என்ற காட்டிலிருந்த கட்டபொம்மனைப் புதுகோட்டை அரசன் விஜயரகுநாதத் தொண்டைமான் கைது செய்து ஒப்படைத்தான்.
கி.பி.1799
அக்டோபர் 16 - ஆம் தேதி கயத்தாற்றில் வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டான். கடைசி நிமிடத்திலும் வீரத்தைக் காட்டி, இன உயர்வை நிலைநாட்டி விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தினான். பானர்மன் எழுதிய அறிக்கையில் "வீரபாண்டியக் கட்டபொம்மன் பகைவரும் போற்றும் பண்பிலும் வீரத்திலும் சிறந்திருந்தார். என எழுதப்பட்டிருக்கிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 27 | 28 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - கட்டபொம்மன், தேதி, திப்பு, ஆங்கிலேயர்கள், தோற்கடிக்கப்பட்டான்