தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள்
கி.பி. 1688-1706
இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.
கி.பி. 1700
உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.
கி.பி. 1705-1742
தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.
புதைபடிவ மனிதர்கள்.
மேல் வரிசை - மாக்ன்னியன்
நடு வரிசை - நியாண்டெர்தல்
கீழ் வரிசை - சீணாந்திரோப்பஸ்
(மீட்டமைப்பு: கெராஸிமவ்)
கி.பி. 1706
மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.
கி.பி. 1712
மருத பாண்டியன் சாதாரண நிலையிலும் தோன்றி திறமையாலும் தொண்டாலும் சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன். அரசியல் முன்னோக்குப் பார்வையும், செயல்வன்மையும், பெற்று சிவகங்கையின் ஒப்பற்ற தலைவன் ஆனார். 1712 ல் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடிக்கவிருந்த சிவகங்கையை மீட்டார். அதைப் பழைய அரச குடும்பத்திடம் ஒப்படைத்தார்.
இராமநாதபுரத்து மேலப்பனும், சிங்கம் செட்டியும், முத்துக் கருப்பனும், தஞ்சை ஞானமுத்துவும் மருது பாண்டியனின் தலைமையை ஏற்றனர், திருநெல்வேலியில் உள்ள பாளையக்காரர்களின் பக்க வலிமையையும் சேர்த்துக்கொண்டு புரட்சிக்காரர்களின் கூட்டிணைப்பு ஒன்றினை உருவாக்கினார், வரிகொடா இயக்கம் இராமநாதபுரத்தில் துவங்கியது. மேலப்பன் தீவிரவாதியாக மாறினார். சிறைக்கு சென்று பின்னர் தப்பித்தார். இராமநாதபுரத்தில் வரிகொடா இயக்கத்தை துவங்கினார்.
கி.பி.1751
ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 27 | 28 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழர் வரலாறு - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - காலம், வரிசை, மருது, இயக்கம், வரிகொடா, இராமநாதபுரத்தில், சிவகங்கையின், பாண்டியன், மில்லியன், தாயுமானவர், மங்கம்மாவின், செய்தார்