தமிழக ஆட்சி முறை - தமிழக சிறப்புக் கூறுகள்
சட்டமன்றம்
மாநில சட்டமன்றம் என்பது கீழவையும் மேலவையும் கொண்டதாகும்.
மாநில சட்டமன்றம்-பேரவை
இச்சபை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது. இச்சபையில் குறைந்தது 60 உறுப்பினர்களும் அதிகபட்சம் 500 உறுப்பினர்களும் இருப்பர். தமிழ்நாடு சட்டசபையில் ஜனவரி 11, 1995ம் ஆண்டு நிலவரப்படி நியமன உறுப்பினர்-1, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 234 ஆக 235 பேர் உள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும். இந்தச் சபைக்கு 18 வயது நிரம்பிய குடிமக்கள் தங்களுடைய வாக்குரிமையால் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் இச்சபையின் உறுப்பினராகப் போட்டியிடலாம். தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில். பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார். சில தொகுதிகள் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாநில சட்ட மன்றம் அதன் முதல் கூட்டத்திலிருந்து 5 ஆண்டுகள் செயல்படும் ஆனால் நிரந்தர அரசு அமைக்கப்படாத காலங்களில் அதற்கு முன்னரே அது கலைக்கப்படலாம். அவசர காலங்களில் தேவைப்படின் 5 ஆண்டுகளுக்கு மேல் மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யலாம். இதன் உறுப்பினர்கள் பேரவையின் செயல்பாடுகளை நடத்த அவர்களுக்குள் சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் தேர்ந்தெடுப்பார்கள். சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு சபாநாயகர் தலைமை தாங்கி நடத்துவார். அவர் ஏதாவது காரணத்தினால் அவ்வாறு செயல்பட முடியாதபோது துணை சபாநாயகர் தலைமை தாங்கி நடத்துவார்.
சட்டமன்றம்-மேலவை
இது மாநிலத்தில் உள்ள நிரந்தர சபை. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடுவதில்லை, இவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்நதெடுக்கப்படுகின்றனர். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 1/3 பங்குக்கு மேர்படாமல் இருத்தல் வேண்டும். 1/3 பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்றங்களினாலும் 1/12 பங்கு உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள பல்கலைக் கழக பட்டதாரிகளாலும், 1/12 பங்கு உறுப்பினர்கள் ஆசிரியர்களாலும், 1/3 பங்கு உறுப்பினர்கள் மாநில கீழவை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.சமூக சேவை, கலை, விஞ்ஞானம் ஆகியவற்றில் சிறந்தவர்களில் இருந்து மேலும் 1/6 பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுனரால் நியமிக்கப்படுவர். மேலவை உறுப்பினர் 30 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இவர் மத்திய, மாநில அரசுகளில் எந்த அலுவல் புரிபவராகவும் இருத்தல் கூடாது. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். 1/3 பங்கு உறுப்பினர்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்கள். ஆகவே இது நிரந்தர சபையாகும், இதன் உறுப்பினர்கள் மேலவைத் தலைவரையும், துணைத்தலைவரையும் அவர்களுக்குள் தேர்ந்தெடுப்பார்கள். மேலவைத் தலைவர் சபையின் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவார். தமிழ்நாட்டில் 1986ம் ஆண்டு சட்டமேலவை கலைக்கப்பட்டது.
முதலமைச்சர், அமைச்சரவை அமைப்பு
மைய அரசிலுள்ளது போன்று மாநிலத்தின் உண்மையான நிர்வாக அமைப்பு அமைச்சரவையாகும். முதலமைச்சரை ஆளுநர் நியமிப்பார், முதலமைச்சரின் ஆலோசனைப்படி ஏனைய அமைச்சர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள். மக்களின் நல்வாழ்வுக்காக அமைச்சரவை பணிபுரிகிறது. முதலமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து நடத்துவார். நாட்டின் நிர்வாகம் பற்றியும் மக்களன் நல்வாழ்வுத் திட்டம் பற்றியும் விவாதிப்பார். சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை அமைச்சரவை நீடிக்கும். அரசின் நிதி மசோதாக்கள் சட்டப் பேரவையில் தான் நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு நலத் திட்டங்கள் சட்டபேரவையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அங்கீகாரம் பெற்று சட்டமாகும்.
தலைமை செயலகம்
தலைமை செயலகம் நிர்வாகத் துறையின் உயர்நிலை அமைப்பாகும். இது மாவட்ட, வட்ட நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு தலைமை செயலாளரும், இவருக்குக் கீழ் ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலாளரும் உள்ளனர். இவர்களுக்கு உதவிட இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர், துணைச் செயலாளர், சார்புச் செயலாளர், கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக உதவியாளர்களும் உள்ளனர்.
ஆளுநர்
தகுதிகள்
ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தலைவர் ஆளுநர் ஆவார். மத்திய அரசின் ஆலோசனைப்படி இவர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார். இவருடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவர் 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இவர் இருக்குமிடம் ஆளுநர் மாளிகை எனப்படும். இது சென்னையில் உள்ளது.
அதிகாரங்கள்
மாநிலத்திலுள்ள நிர்வாகம், சட்டமன்றத் துறை, நிதி மற்றும் நீதி சம்மந்தமான் அதிகாரங்கள் அனைத்திற்கும் ஆளுநரே தலைவராவார். மாநில அரசால் நிறைவேற்றப்படும் எல்லா நிர்வாக முடிவுகளும், நடவடிக்கைகளும் ஆளுநரின் இசைவினைப் பெற வேண்டும். மாநிலத்தின் தேர்வாணைக்குழு உறுப்பினர்கள், சார்பு நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் போன்றவர்களை நியமிப்பார். சட்டமன்றத்தைக் கூட்டவோ ஓத்திப் போடவோ தக்க காரணம் காட்டி மத்திய அரசின் ஆலோசனைப்படி கலைக்கவோ ஆளுநருக்கு அதிகாரமுண்டு. சட்டமன்றம் கூடாத சமயங்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்க அவருக்கு அதிகாரமுண்டு. ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பட்டவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழக ஆட்சி முறை - Tamilnadu Administration - தமிழக சிறப்புக் கூறுகள் - Tamilnadu Highlights - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - உறுப்பினர்கள், தமிழக, மாநில, தலைமை, tamilnadu, ஆளுநர், பங்கு, இதன், முறை, சட்டமன்றம், இவர், வேண்டும், இருத்தல், வயது, கூறுகள், சிறப்புக், செயலாளர், ஆட்சி, நடத்துவார், நிரந்தர, அமைச்சரவை, ஆலோசனைப்படி, தகவல்கள், மாநிலத்தின், உறுப்பினர்களின், மத்திய, உறுப்பினர், அரசின், தமிழ்நாட்டுத், உள்ளனர், | , மேலவைத், அதிகாரமுண்டு, பதவிக்காலம், நிர்வாக, நிரம்பியவராக, நிதி, செயலகம், சென்னையில், பற்றியும், நிர்வாகம், அமைப்பு, செயலாளரும், அதிகாரங்கள், நியமிப்பார், முதலமைச்சர், நடவடிக்கைகளுக்கு, எண்ணிக்கை, ஆண்டு, மக்கள், நிரம்பிய, ஒவ்வொரு, உறுப்பினர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட, administration, highlights, information, மக்களால், சட்டமன்ற, ஆண்டுகள், சபாநாயகர், தாங்கி, மேலவை, கீழவை, தேர்ந்தெடுப்பார்கள், துணை, காலங்களில், ஆண்டுகளுக்கு, அவர்களுக்குள், சபாநாயகரையும், இருந்து