சேதுபதி மன்னர் வரலாறு - தனியார்கள்
சேதுபதி மன்னர்கள் வள்ளல் தன்மைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பவை அவர்கள் தனியார்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான அறக்கொடைகள் ஆகும் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள். செப்பேடுகளின் படி இத்தகைய அறக்கொடைகளைப் பெற்றவர்கள் 210 பேர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தானமாக பெற்ற ஊர்கள் 219 ஆகும். இத்தனை ஊர்களை இந்த மன்னர்கள் தானமாக வழங்கி யிருப்பதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டி யிருக்கிறது. சேதுபதி மன்னர்களது பெருமையையும் ஆடம்பர வாழ்க்கையினையும் பறை சாற்றுவதற்காக வழங்கப்பட்டவையா இந்தக் அறக்கொடைகள்?
கல்வி வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத கி.பி.17,18 ஆம் நூற்றாண்டுகளில் சேது நாட்டு மக்களது இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மன்னர்கள் பெரிதும் முயன்று வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதிப்படித்த அந்தக்காலத்தில் குடிமக்கள் சமயச் சிந்தனையையும் இலக்கிய ஈடுபாட்டினையும் பெறுவதற்காக இந்த மன்னர்கள் பல அவதானி களையும், பண்டிதர்களையும் வித்வத் மகாஜனங்களையும். நாட்டுத் வைத்தியர்களையும் சேது நாட்டுக்கு வரவழைத்து நிலையாகத் தங்கித் தங்களது பணியினைத் தொடர்வதற்காகத்தான் இத்தனை அறக் கொடைகள். இந்து சமயம் சேது நாட்டின் அப்பொழுதைய பொதுச் சமயமாகக் கருதப்பட்டாலும் அந்தச் சமயங்களின் அடிப்படைக் கருத்துக்களை நடைமுறைகளை சாதாரண மக்கள் அறிந்து கொள்ளுவதற்கான வாய்ப்பே இல்லாத அவல நிலை சைவ சமயச் சாத்திரங்களிலும் தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தம் ஆகிய இலக்கியங்களிலும் தேர்ந்திருந்த பண்டிதர்களும் அவதானிகளும் இங்கு வரவழைக்கப்பட்டனர். இதைப் போன்றே பெரிய திருக்கோயில்களில் இசை, நாட்டியம், நட்டுவம், நாதஸ்வரம் ஆகிய தமிழ்க் கலைகளைப் பரப்புவதற்குக் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை இசைக் குழுவினர். நாட்டிய நங்கைகள், நாதஸ்வரக் கலைஞர்கள் ஆகியோரும் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை இந்த அறக்கொடைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இத்தகைய அறிவுடை மக்கள் பெற்ற அறக்கொடைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கிய நிலக்கொடைகள் விவரம்
VI. தனியார்கள்
தானம் பெற்ற ஊர் - தானம் வழங்கப்பட்ட அமைப்பு - தானம் வழங்கப்பட்ட நாள்
I. தளவாய் சேதுபதி
1. இராமசாமி ஐயங்கார்
மேட்டுக்கைகளத்துர் - சகம் 1560 (கி.பி.1638) வெகுதானிய வைகாசி
2. திருவேங்கடம் ஐயர்
மேலகைக்குடி - சகம் 1562 (கி.பி.1640) தை
II. திருமலை சேதுபதி (கி.பி.1647-74)
1. சுந்தரமையன், அப்பாசாமி
கயிலாச மங்கலம் - சகம் 1565 (கி.பி.1643) சாதாரண தை
2. கோபால ஐயன்
வலையன்குளம் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய தை
3. சேனையன், சுப்பையன்
மாவிலங்கை - சகம் 1565 (கி.பி.1641) பரிதாபி தை
4. ஜகநாதையன்
வாதவனேரி
ஆரம்பக்கோட்டை - சகம் 1577 (கி.பி.1655) மன்மத
5. சீனிவாச ஐயன்
சிறுகுடி - சகம் 1575 (கி.பி.1653) ஜய-வைகாசி
6. அனந்தராம ஐயர்
அவதானி மதிப்பனேந்தல் - சகம் 1590 (கி.பி.1668) சாதாரண சித்திரை
7. வெங்கட கிருஷ்ணையன்
கிடாவெட்டியேந்தல் - சகம் 1574 (கி.பி.1652) நந்தன ஆடி
8. ரங்க ஐயன், கோபால ஐயன்
ஊறவயல் - சகம் 1585 (கி.பி.1663) சோட கிருது சித்திரை
9. வைகுந்த ராம ஐயன்
கடலூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை
10. வைத்தி ஐயன், சுப்பிரமணிய ஐயன்
உப்பூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை
தேடல் தொடர்பான தகவல்கள்:
தனியார்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், ஐயன், சேதுபதி, மன்னர்கள், தானம், சேது, அறக்கொடைகள், பெற்ற, சாதாரண