சேதுபதி மன்னர் வரலாறு - அன்ன சத்திரங்கள்
பாரக மடங்கலும் பசிப்பிணி அறுக எனத் தமது அமுத சுரபியைக் கொண்டு ஏழை எளியவர்களுக்கு மணிமேகலை அமுது படைத்ததாகத் தமிழ் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. சேது மன்னர்களது ஆட்சியில் பசிப்பிணி நீங்கி மக்கள் அனைவரும் நிறைவுடன் வாழ்ந்ததாகத் தெரிய வருகின்றது. மேலும் சேது யாத்திரையாக இராமேஸ்வரம் வருகின்ற பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் நாள் தோறும் அன்னம் படைத்ததைப் பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இராமேஸ்வரம் திருக்கோயில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பதிகங்கள் பாடப்பெற்றுப் போற்றப்பட்டு வந்ததை இலக்கிய வரலாறு தெரிவிக்கின்றது. நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்களின் படி விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள மாநிலங்களில் இருந்து பயணிகள் சேதுயாத்திரையை மேற்கொண்டு வந்து சென்றனர் என்பது தெரிய வருகின்றது. அப்பொழுது வடக்கே இருந்து தெற்கேயும் மேற்கே இருந்து கிழக்கேயும், தெற்கே இருந்து வடகிழக்கேயுமாக மூன்று பாதைகள் இராமேஸ்வரத்திற்கு இருந்தன. போக்குவரத்து வசதியும் மக்கள் நடமாட்டமும் இல்லாத இந்தப் பாதைகளின் வழியே தலையில் ஒரு சிறிய துணி முடிச்சைச் சுமந்தவாறு கால் நடையாகவே வருகின்ற நூற்றுக் கணக்கான பயணிகளுக்குச் சேதுபதி மன்னர்கள் அந்த வழித்தடங்களில் அன்ன சத்திரங்கள் அமைத்துப் பயணிகளது களைப்பையும் பசிப் பிணியையும் நீக்கி உதவி வந்தனர். வடக்கே சோழ மண்டலத்தில் இருந்து கிழக்குக் கடற்கரையோரமாக இராமேஸ்வரம் வழித் தடத்திலும் நெல்லைச் சீமையின் வட பகுதியான வேம்பாறிலிருந்து சாயல் குடி, உத்திர கோசமங்கை. திருப்புல்லாணி வழியாகக் கிழக்கே செல்லுகின்ற வழித் தடத்திலும் அன்ன சத்திரங்கள் அமைத்து உதவிய பல மண்டபங்கள் இடிபாடுகளுடன் பரிதாபமாக இன்றும் காட்சியளிப்பவனாக இருக்கின்றன.
கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை இந்த வழித் தடங்களில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு பயணிக்கும் அன்ன சத்திரங்கள் நாள் தோறும் இருவேளை சோறு வழங்குவதற்காகச் சேதுபதி மன்னர்கள் பல ஊர்களை இறையிலியாக வழங்கியிருந்தனர். இவைகளைக் குறிக்கும் செப்பேடுகளிலிருந்து திரட்டப் பெற்ற செய்திகளின் படி 39 சத்திரங்களுக்கு எழுபத்தி ஏழு (77) ஊர்களைச் சேதுபதி மன்னர்கள் சர்வமானியமாக வழங்கியிருந்தது இப்பொழுது தெரிய வருகிறது. அவைகளின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவணப் பதிவேடுகளின்படி
III சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக் கொடைகளின் விவரம் அன்ன சத்திரங்களுக்கு
தானம் பெற்ற ஊர் - தானம் வழங்கப்பட்ட அமைப்பு - தானம் வழங்கப்பட்ட நாள்
I. குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. செல்ல பூபால சத்திரம், இராமநாதபுரம்
வெள்ள மரிச்சுக்கட்டி
கொடிக்குளம்
II. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திருப்புல்லாணி - வெள்ளையன் சேர்வை சத்திரம்
காஞ்சிரங்குடி சகம் 1678 (கி.பி.1756) தாது ஐப்பசி 17
III. முத்து ராமலிங்க சேதுபதி
1. ஆத்தங்கரை சத்திரம்
நகரிகாத்தான்
2. பிள்ளை மடம் சத்திரம்
சாத்தக்கோன் வலசை
3. தோணித்துறை சத்திரம், மண்டபம்
அத்தியூத்து
4. கஜானா வெங்கட் ராவ் சத்திரம்
திருப்புல்லாணி
5. கோதண்ட ராம சத்திரம்
பந்தப்பனேந்தல்
கடுக்காய் வலசை - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு பங்குனி 28,
6. புருசோத்தம் பண்டித சத்திரம் - திருப்புல்லாணி
கழுநீர்மங்கலம் - சகம் 1703 (கி.பி.1783) பிலவதை
7. தனுஷ்கோடி சத்திரம்
ஆலங்குளம் -
போத்த நதி -
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்ன சத்திரங்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சத்திரம், சேதுபதி, இருந்து, மன்னர்கள், திருப்புல்லாணி, அன்ன, முத்து, தெரிய, சகம், தானம், இராமேஸ்வரம், சேது, சத்திரங்கள், வழித், நாள்