சேதுபதி மன்னர் வரலாறு - திருமடங்கள்
காலங்கள் தோறும் மக்களின் உள்ளங்களில் சமயப் பற்றை வளர்ப்பதற்காகச் சேதுநாட்டின் பல திருமடங்கள் இயங்கி வந்ததை வரலாற்றில் காணுகின்றோம். அவைகளில் குறிப்பாகச் சைவ சமய பிரச்சாரத்திற்காகத் திருவாவடுதுறை ஆதினமும் வைணவக் கொள்கை களை விளக்குவதற்காக நாங்குநேரி ஜீயர் சுவாமிகள் மடமும் இயங்கி வந்ததை, இன்றும் இயங்கி வருவதைக் காண்கின்றோம்.
மேலும் பல சிறிய மடங்கள் சேதுநாட்டில் இயங்கி வந்ததை ஆவணப் பதிவுகளில் பதிவு செய்யப் பெற்றுள்ளன. இந்தப் பதிவுகளின் படி அப்பொழுது 22 திருமடங்கள் இயங்கி வந்தன என்பது தெரிய வருகின்றது. இவைகளில் ஒரே ஒரு மடம் நீங்கலாக 20 திருமடங்கள் சைவ சமயத்தைச் சார்ந்தனவாக இருந்தன. பரமக்குடி வட்டத்திலுள்ள பண்டரி நாதர் மடம் என்ற அமைப்பு மட்டும் வைணவர்களால் நடத்தப்பட்டு வந்தது.
இந்தத் திருமடங்களில் பெரும்பாலும் வழிப் போக்கர்களுக்கும் பயணிகளுக்கும் நீரும் மோரும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. திருப்பெருந்துறையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் நாள்தோறும் மகேசுவர பூஜை நடத்தப்பட்டுப் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த அறச்செயல்கள் என்றும் நிலைத்து நடைபெற வேண்டும் என்பதற்காகச் சேதுமன்னர்கள் இந்த 22 மடங்களுக்கு 41 ஊர்களை சர்வ மானியமாக தானம் வழங்கி இருந்தனர். அந்த மடங்களின் பெயர்களும் அவைகளுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்களின் பெயர்களும் பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆவணப் பதிவேடுகளின்படி
சேதுபதி மன்னர்கள் கொடைகளின் விவரம் வழங்கிய நிலக் கொடைகளின் விவரம் திருமடங்களுக்கு
தானம் பெற்ற ஊர் - தானம் வழங்கப்பட்ட அமைபபு - தானம் வழங்கப்பட்ட நாள்
I. தளவாய் சேதுபதி
1. மாசிலாமணி பண்டார மடம், இராமேஸ்வரம்
புளியங்குடி சகம் 1553 (கி.பி.1631) பிரஜோர்பதி தை 15
II. திருமலை சேதுபதி
1. ஆனைகுடி சகம் 1588 (கி.பி.1666) பிரபவ வையாசி 5
2. பண்டரிநாத மடம், சித்தனேந்தல்
3. திருவாவடுதுறை மடம், திருவாவடுதுறை
கங்கணிகட்டி சேரி சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி 5
4. அன்னதான மடம், கமுதை
கமுதை சகம் (1592) கி.பி.1670 சாதாரண தை.
III. கிழவன் சேதுபதி
1. திருவாவடுதுறை மடம்
திருப்பாலைக் கோட்டை சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை
நாட்டு சேரி சகம் 1611 (கி.பி.1689) பிரமோதுத கார்த்திகை
2. பெருமாள் ஞானிகள் மடம் (தண்ணீர் பந்தல்)
பறையன்குளம் சகம் 1627 (கி.பி.1705) பார்த்திப ஆனி 1.
IV. முத்து வயிரவநாத சேதுபதி
1. மூர்த்தி மடம் - அழகன்குளம்
பின்னாணியாரேந்தல் சகம் 1631 (கி.பி.1713) விகாரி வைகாசி V முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. பண்டார மடம், உத்தரவை
பூவாணி சகம் 1639 (கி.பி.1718) வில9உ மாசி 25
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமடங்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - மடம், சகம், சேதுபதி, இயங்கி, திருவாவடுதுறை, தானம், வழங்கப்பட்ட, வந்தது, வந்ததை, திருமடங்கள்