சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
மேலும் திருப்புல்லாணித் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் ரெகுநாத திருமலை சேதுபதி மன்னர் செய்துள்ளார். நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோயில் கொடி மண்டபத்தையும், காளையார் கோவில் காளைநாதர் சுவாமி திருக்கோயிலையும், மகா மண்டபத்தையும் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் நிறைவேற்றி வைத்துள்ளார். இராமேஸ்வரத் திருக்கோயிலின் கட்டுமானம் முழுவதையும் கூத்தன் சேதுபதி, தளவாய் சேதுபதி, திருமலை ரெகுநாத சேதுபதி, முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் வழிவழியாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரகார அமைப்புக்களையும், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அணுக்க மண்டபம் ஆகியவற்றையும் அமைத்துத் தங்களது தெய்வ சிந்தனையையும் சமயப்பற்றையும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் திருக்கோயில்களுக்கு வழங்கிய சர்வ மானிய கிராமங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சேதுபதி மன்னர்களது அறக்கொடைகள் பட்டியல்
ஆவணப் பதிவேடுகளின்படி
I. உடையான் சடைக்கன் சேதுபதி
I. திருக்கோயில்கள்
தானம் வழங்கப்பட்ட ஊர் - தானம் பெற்ற அமைப்பு - தானம் வழங்கப்பட்ட நாள்
1. திருவாடனை ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில்
கருப்பூர் - சகம் 1527 (கி.பி.1605), விசு, பங்குனி 15
அச்சங்குடி சகம் 1528 (கி.பி.1506) பிரபவ கார்த்திகை 13
2. இராமேஸ்வரம் திருக்கோயில்
நாகனேந்தல் - சகம் 1538 (கி.பி.1615), தை 15
ரெட்டையூரணி, வில்லடி வாகை - சகம் 1538 (கி.பி.1615), தை 15
II. கூத்தன் சேதுபதி
1. திருவாடானைத் திருக்கோயில்
கீரமங்கலம் - சகம் 1546 (கி.பி.1624) சித்தாட்டி, பங்குனி 19
கீரணி - சகம் 1546 (கி.பி.1624) குரோதன, வைகாசி 22
கேசனி - சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி, சித்திரை 10
பில்லூர் - சகம் 154.5 (கி.பி.1623) ருத்ரோதரி, தை
III தளவாய் சேதுபதி
1. அரியநாயகி அம்மன் கோயில், திருவாடனை
பிடாரனேந்தல் - சகம் 1553 (கி.பி.1631) - சித்திரபானு, தை 10
2. ஆண்டு கொண்ட ஈசுவரர் கோயில், திருத்தேர்வளை
கொங்கமுத்தி - சகம் 1561 (கி.பி.1639) - வெகுதான்ய, வைகாசி 20
தண்டலக்குடி - சகம் 1561 (கி.பி.1639) வெகுதான்ய, வைகாசி 20
IV. திருமலை சேதுபதி
1. திருஉத்திர கோச மங்கைத் திருக்கோயில்
கொல்லன்குளம் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன, ஆடி
காடனேரி - சகம் 1573 (கி.பி.1651) நந்தன, ஆடி
பன்னிக்குத்தி - சகம் 1573 (கி.பி.1651) நந்தன,ஆடி
கழனியேந்தல் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன, ஆடி
கள்ளிக்குளம் - சகம் 1573 (கி.பி.1651) நந்தன, ஆடி
2. இராமேஸ்வரம் திருக்கோயில்
குமாரக் குறிச்சி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச, தை 15
கருமல் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச, தை 15
முகிழ்த்தகம் - சகம் 1570 (கி.பி.1647) சுபகிருது, மாசி 10
நம்பு தாழை - சகம் 1604 (கி.பி.1682) துந்துபி, ஆணி 15
3. திருவாடானைத் திருக்கோயில்
ஆதியாகுடி - சகம் 1568 (கி.பி.1646) வியசு, தை
4. வழிவிட்ட ஐயனார் கோயில், கமுதி
ஆலங்குளம் - சகம் 1594 (கி.பி.1670) சாதாரண, மாசி 30
அய்யனார் குளம் - சகம் 1594 (கி.பி.1670) சாதாரண, மாசி 30
5. மந்திர நாத சாமி கோயில், திருப்பாலைக்குடி
ஆலங்குளம் - சகம் Isoa (கி.பி.167o) சாதாரண, மாசி 30
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், சேதுபதி, திருக்கோயில், நந்தன, மாசி, கோயில், சாதாரண, தானம், திருமலை, மண்டபம், ரெகுநாத, வைகாசி