குறுந்தொகை - சங்க காலம்
இயற்பெயரான் அன்றிச் சிறப்புப் பெயரால் அறியப்பட்ட புலவர் பலர் இதில் இடம் பெறுவர். அணிலாடு முன்றிலார், குப்பைக்கோழியார், விட்ட குதிரையார் என்பவை அவற்றுள் சில. தாம் பாடிய பாடல்களில் இடம் பெற்ற அழகிய தொடரே இப்பெயர்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
காதல் வாழ்வின் பல்வேறு சிறப்புகளும் இந்நூலில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49) |
(இம்மை = இப்பிறவி ; மறுமை = அடுத்து வரும் பிறவி;
நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)
என்ற பகுதி, காதலின் அமரத் தன்மைக்குச் சான்றாகும்.
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே (3) |
என்ற பகுதியால் காதலின் ஆழமும், விரிவும், உயர்ச்சியும் உணர்த்தப் படுகின்றன.
ஒரு பெண், ஊரார் பேசும் பழிச் சொல்லால் தன் உள்ளம் நைவதற்கு உவமையாக, யானையால் மிதிக்கப்பட்ட நன்கு முதிர்ந்த
அத்திப் பழத்தைக் குறிப்பிடுகிறாள். (24)
மற்றொரு தலைவி தனக்கும் ஆகாது, தன் காதலனுக்கும் பயன்படாது வீணாகும் தன் பெண்மை நலத்துக்கு, கன்றும் உண்ணாமல், கலத்திலும் (பாத்திரத்திலும்) கறக்கப்படாமல்,
மண்ணில் வீழ்ந்து பாழாகும் நல்ல ஆவின் பாலை உவமை கூறுகின்றாள் (27). தாய்வழியிலும் தந்தை வழியிலும் உறவினராகாத ஓர் ஆணும் பெண்ணும் அன்பினால் ஒன்றுபடுதலுக்குச் செம்மண் நிலத்திலே பெய்த மழையை உவமை கூறினார் ஒரு புலவர். அவரே செம்புலப்பெயல் நீரார். அவரது இறவா வரிகள்:
செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே (40) |
(புலம் = நிலம்)
தன் காதலனாகிய கடுவனை இழந்த பெண் குரங்கு, தன் இளங்குட்டியைத் தன் இனத்திடம் விட்டு, மலையிலிருந்து வீழ்ந்து உயிர் துறத்தலை ஒரு புலவர் காட்டுகின்றார்.
ஆடவனுக்குக் கடமையே உயிராக, வீட்டிலிருந்து இல்லறம் செய்யும் பெண்களுக்குத் தம் ஆடவரே உயிர் என்கிறது ஒரு செய்யுள். (135)
குறுந்தொகை - Kuruntokai - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - குறுந்தொகை, காலம், சங்க, நூல்கள், தமிழ்நாட்டுத், இலக்கிய, தமிழ், இடம், தகவல்கள், புலவர், பல்வேறு, இம்மை, மறுமை, வீழ்ந்து, உயிர், | , உவமை, பாடிய, பெண், காதலின், information, tamil, period, sangam, kuruntokai, literatures, list, பாடல்கள், இதில், tamilnadu, இதன்