முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழ் இலக்கிய நூல்கள் » சங்க காலம் » குறிஞ்சிப் பாட்டு (பெருங்குறிஞ்சி)
குறிஞ்சிப் பாட்டு (பெருங்குறிஞ்சி) - சங்க காலம்
இது 261 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும். குறிஞ்சிக்குரிய இயற்கைப் புணர்ச்சியும் அதற்குரிய நிமித்தங்களும் இதில் காணப்பட்டமையால் குறிஞ்சிப்பாட்டாயிற்று. பெருங்குறிஞ்சி என்ற பெயரும் இதற்கு உண்டு. இது அறத்தொடு நிற்றல் என்ற அகத்துறைக்கு அழகான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. காதல் நோயால் அவதியுறும் தலைவியின் மேனி வேறுபாடுகளைக் கண்ட அன்னை, கடவுளர்க்குப் பூசைகள் நிகழ்த்தியும், நிமித்திகர்களைக் கலந்தும் (சோதிடர்கள்) துயர் உறுவது கண்ட தோழி, தலைவியின் துயருக்கு, அவள் ஒரு மலைநிலத் தலைவனிடம் கொண்ட காதலே காரணம் என்று வெளிப்படக் கூறும் வகையில் இப்பாட்டு இயற்றப்பட்டுள்ளது. ஆரிய அரசன் பிரகத்தன் என்பானுக்குத் தமிழ் அகத்திணைச் சிறப்பைக் கூறும் நோக்கத்தில் குறிஞ்சிக் கபிலர் இயற்றியது இச்செய்யுள் என்பர் அறிஞர். அருவியில் நீராடிய பெண்கள் பறித்து, பாசறையில் குவித்துச் சூடி மகிழ்ந்த 99 வகையான மலர்கள் பற்றிய வருணனை, கபிலரின் இயற்கையீடுபாட்டுக்குச் சான்றாகும்.
மிளகு உதிர்ந்து பரவிக் கிடக்கும் பாசறையிடையே காணப்பட்ட சுனையொன்றில், மாம்பழமும், பலாச்சுளையும், தேனும் விழுந்தமையால் உண்டான தேறலை நீரென்று கருதி உண்ட மயிலொன்று மயக்கமுற்றுத் தள்ளாடித் தள்ளாடி நடப்பது, பேரூர் ஒன்றில் விழாவில் கயிற்றின்மேல் ஏறி நின்று ஆடும் விறலிபோல் தோன்றுவதாகக் கபிலர் பாடுவது சிறப்பாக உள்ளது.
கதிரவன் மேற்றிசையில் மறையும் மாலைப் பொழுதின் நிகழ்வுகளையும், தலைவன் வரும் வழியில் தோன்றும் பல்வேறு இடையூறுகளையும், தலைவனுடைய உருவத் தோற்றத்தையும் கபிலர் தமக்கே உரிய வகையில் விளக்கியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறிஞ்சிப் பாட்டு (பெருங்குறிஞ்சி) - Kurinjipattu - சங்க காலம் - Sangam Period - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - பெருங்குறிஞ்சி, காலம், குறிஞ்சிப், சங்க, தமிழ், பாட்டு, தமிழ்நாட்டுத், தகவல்கள், இலக்கிய, நூல்கள், கபிலர், தலைவியின், வகையில், கண்ட, கூறும், கொண்ட, | , literatures, sangam, kurinjipattu, period, tamil, tamilnadu, list, information