(tt) - ஆறாம் நூற்றாண்டு
இந்நூலும் ஐந்து திணைகளையும் பற்றிய ஐம்பது பாக்களைக் கொண்டதே. ஒவ்வொரு திணைக்கும் பத்துப்பாடல்களைக் கொண்டிருக்கும் இந்நூல் ஐந்திணை ஐம்பதிற்கு வழி காட்டிற்றா அன்றி ஐந்திணை ஐம்பது இதற்கு வழி காட்டிற்றா என்பது விளங்கவில்லை. திணைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையில் அமைந்துள்ளன.
இதன் ஆசிரியர் கண்ணஞ்சேந்தனார். இவர் தந்தை பெயர் சாத்தந்தையார். கார்நாற்பதின் ஆசிரியர் கண்ணங்கூத்தனாரும், கண்ணஞ்சேந்தனாரும் உடன்பிறந்தவரோ என ஐயுறுவார் உளர்.
பன்றிகள் தம் கொம்புகளால் தோண்டி வெளிப்படுத்திய மாணிக்கக் கற்கள் இரவில் ஒளிவிட்டமையால், அதனைத் தீயெனப் பிறழ உணர்ந்த கானவர் தம் கைகயை நீட்டிக் குளிர்காய முனைந்தனர் என்பார் இவர் (4).
பலாக்கனியொன்றைப் பெற்ற ஆண்குரங்கு அதனைத் தன் காதலியோடு உண்டு மகிழ விரும்பி அதனை அன்போடு அழைக்கும் என இவர் கூறுவது (10) அகநானூற்றின் 353 ஆம் செய்யுளை நினைவூட்டுகின்றது.
அஞ்சனம் காயா மலரக் குருகிலை ஒண்தொடி நல்லார் முறுவல் கவின்கொளத் தண்கமழ் கோடல் துடு்ப்பு ஈனக் காதலர் வந்தார் திகழ்க நின்தோள் (21) |
என்பது இந்நூலின் மிக அழகிய பாட்டுகளுள் ஒன்றாகும்.
“காயாச் செடி கண்மை போலப் பூக்க, குருக்கத்திச் செடி பெண்களின் பற்களைப் போன்று விளங்க, வெண் காந்தள் துடுப்பைப் போன்று மலர, நம் தலைவர் மணம் பேச வந்தார்; எனவே உன் தோள்கள் முன் போல் பூரிக்க” - என்பது இதன் பொருள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
(tt) - Tinaimoli Aimpatu - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - நூற்றாண்டு, ஆறாம், நூல்கள், இவர், தகவல்கள், இலக்கிய, தமிழ், தமிழ்நாட்டுத், என்பது, ஆசிரியர், இதன், செடி, | , போன்று, காட்டிற்றா, வந்தார், அதனைத், tamilnadu, tamil, century, aimpatu, literatures, list, ஐம்பது, information, tinaimoli, ஐந்திணை