ஐந்திணை எழுபது - ஆறாம் நூற்றாண்டு
அன்பின் ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பவற்றுள் ஒவ்வொன்றுக்கும் 14 செய்யுட்கள் வீதம் எழுபது செய்யுட்களைக் கொண்டிருப்பதனால் இப்பெயர் பெற்றது. இப்பொழுது இந்நூலில் 66 வெண்பாக்கள் மட்டுமே உள்ளன. எஞ்சிய நான்கும் அழிந்து போயின (25, 26, 69, 70).
இன்னிசை வெண்பாக்களாலும் நேரிசை வெண்பாக்களாலும் ஆனது இது. இதில் கடவுள் வாழ்த்துப்பாவொன்று உண்டு. அது விநாயகர் வணக்கமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ்நாட்டில் வழக்கிற்கு வந்தது. எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு உரிய இந்நூலில் உள்ள இவ்வாழ்த்துப் பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்பர். இதற்குப் பழைய உரை இல்லாமை இதற்குச் சான்றாகும்.
ஆசிரியர்
இதனை இயற்றியவர் மூவாதியார். இவரைச் சமணர் என்பர் சிலர். ஆனால், நூலில் இதற்குச் சான்று இல்லை. இவருடைய பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஒருவேளை அயன், மால், சிவன் என்னும் மூன்று கடவுளர்க்கும் மூலமான பரம்பொருள் என்று இப்பெயருக்கு விளக்கம் கூறலாம்.
சிறப்புச் செய்திகள்
இந்நூல் ஐந்திணை ஐம்பது என்ற நூலை அடியொற்றியது. பெயர் ஒற்றுமையும் வேறு சில குறிப்புகளாலும் இதனை உணரலாம். ஐந்திணை ஐம்பதின் 38 ஆம் செய்யுளில் வரும்.
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி |
என்பதும் ஐந்திணை எழுபதில் 36 ஆம் செய்யுளில் வரும்,
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி |
என்பதும் ஒத்திருத்திருக்கின்றன.
சான்றோருடனான நட்பு இப்பிறப்பில் சிதைவுபடாமல் ஊன்றி நின்று வலிமை பயப்பதோடு, வரும் பிறவிகளிலும் உறுதுணையாகும் என்கிறார் இவ்வறிஞர்.
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி வலிஆகி, பின்னும் பயக்கும் - (5) |
புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை, கொல்லுநர் போல வரும் (17) |
(புல்லுநர் = அணைக்கும் காதலர்) என்ற இந்நூலின் பகுதி,
காதலர் இல்வழி மாலை, கொலைக்களத்து ஏதிலர் போல வரும் (திருக்குறள் : 123 : 4) |
என்ற திருக்குறளின் எதிரொலியாகும்.
பெண்களுக்கு இடக்கண் துடித்தல், நல்ல இடத்தில் பல்லி ஒலி செய்தல், நல்ல கனாக்கள் காணல் என்பன நல்லவை நிகழ்வதனை உணர்த்தும் அறிகுறிகள் என்று இந்நூலின் 41ஆம் செய்யுள் கூறுகின்றது. இது சமுதாய நம்பிக்கைகளின் வெளிப்பாடு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்திணை எழுபது - Aintinai Elupatu - ஆறாம் நூற்றாண்டு - 6th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - ஐந்திணை, எழுபது, வரும், நூற்றாண்டு, என்பர், ஆறாம், காதலர், தகவல்கள், தமிழ்நாட்டுத், தமிழ், நூல்கள், இலக்கிய, படர்ந்த, சுரம், நெறி, உள்ளம், புல்லுநர், நல்ல, | , இந்நூலின், மாலை, ஊன்றி, என்பதும், வெண்பாக்களாலும், tamil, literatures, century, elupatu, aintinai, list, tamilnadu, இதற்குச், இதனை, உரிய, இந்நூலில், information, செய்யுளில்