திரிகடுகம் - நான்காம் நூற்றாண்டு
கடவுள் வாழ்த்தோடு சேர்ந்து 101 வெண்பாக்களைக் கொண்ட நீதிநூல் இது. இதில், திரிகடுகம் என்ற மருந்தில் அடங்கியுள்ள சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று காரப் பொருள்கள் போன்ற மூன்று அறக்கருத்துக்களை ஒவ்வொரு பாடலும் கூறுவதால் இப்பெயர் பெற்றது. (திரி = மூன்று; கடுகம் = காரப்பொருள்) திரிகடுகச் சூரணம் உடல் நோயைத் தீர்ப்பது போல், அப்பெயர் கொண்ட இந்நூல் அகநோயைத் தீர்க்கவல்லது.
நூலின் ஆசிரியர்
இதன் ஆசிரியர் நல்லாதனார். திருத்து என்னும் ஊரில் பிறந்தவர் இவர் என்பது செல்வத்திருத்து உளார் செம்மல் என்ற சிறப்புப்பாயிரச் செய்யுளால் தெரிகின்றது. இவ்வூர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது என்பர். இவ்வாசிரியர் இயற்றிய கடவுள் வாழ்த்தில் திருமாலின் புகழ் பேசப்படுவதால் இவர் வைணவ நெறியினர் என்பது பெறப்படுகிறது.
சிறப்புச் செய்திகள்
இந்நூலாசிரியர் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகியவற்றின் கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். இதில் காணும் பழமொழிகளாவன (1) உமிக்குற்றுக் கை வருந்துவார் (2) தம் நெய்யில் தாம் பொரியுமாறு (3) துஞ்சு ஊமன் கண்ட கனா (4) தூற்றின்கண் தூவிய வித்து முதலியனவாகும்.
இந்நூலில் நெஞ்சில் நிறுத்தத்தக்க பொன்மொழிகளுள் சில வருமாறு:
ஈதற்குச் செய்க பொருளை (90) நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் (72) கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் (52) நெஞ்சம் அடங்குதல் வீடாகும் (43) |
ஊன் உண்டலையும், வேள்வியில் உயிர்க்கொலை செய்தலையும் இந்நூல் கண்டிக்கின்றது (36). சூதினால் வந்த பொருளை விரும்பல் ஆகாது (42). விருந்தின்றி உண்ட பகல் அறிவுடையவர்க்கு நோயாகும் (44). பொய் நட்பின் சிறப்பை அழித்து விடும் (83) முதலிய இந்நூற் கருத்துகள் என்றும் நினைவில் நிற்பனவாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - Tirikatukam - நான்காம் நூற்றாண்டு - 4th Century - தமிழ் இலக்கிய நூல்கள் - Tamil Literatures List - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திரிகடுகம், நூற்றாண்டு, நான்காம், தமிழ்நாட்டுத், மூன்று, நூல்கள், தகவல்கள், இலக்கிய, தமிழ், இந்நூல், tirikatukam, | , ஆசிரியர், இவர், என்பது, என்னும், பொருளை, கொண்ட, list, literatures, tamil, century, tamilnadu, கடவுள், information, இதில்