கம்பராமாயணம் (உரைநடை) - இறை வணக்கம்
சீரை சுற்றித் திருமகள் முன் செல
முரிவிற்கை இளையவன் பின் செலக்
காரை யொத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்னுமோ
இறை வணக்கம்
உலகம் யாவையும்தாம் உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனுக்குத் தொடர்ந்த விளையாட்டுகளாகும். அவர் எம் தலைவர் ஆவார். அன்னவர்க்கே நாங்கள் அடைக்கலம். இறைவன் எம்மைக் காப்பானாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறை வணக்கம் - Kamparamayanam (Prose) - கம்பராமாயணம் (உரைநடை) -