தூத்துக்குடி - தமிழக மாவட்டங்கள்
தரங்கத்தாரா இரசாயன தொழிற்சாலை :
தூத்துக்குடிக்கு 25கி.மீ. தெற்கே, கடற்கரைக்கு தொலைவில், இந்நிறுவனம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 75,000 டன் காஸ்டிக் சோடா தயாரிக்க முடியும். உற்பத்திக்குச் சாதகமாக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்ஷியம் கார்பைடு 15,000 டன்னுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப் படும் போலிவினில் குளோரைடு முதலிய பல பொருள்களும் இங்குத் தயாராகின்றன. இது ஆசியாவிலேயே பெரிய இரசாயனத் தொழிற்சாலை ஆகும். தொடக்கத்தில் மூன்றரைக் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை, இன்று இம்மாவட்டத்தில் வளரும் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.
தொழில் தொடங்கச் சாத்தியக் கூறுகள் :
இம்மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால் தொழிலுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய தொழில் வளர்ச்சி நிறுவனம் இம்மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கீழே கண்டவைகளை செயல்படுத்துவது தொழில் முனைவோருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது, அவையாவன :
1. கரும்பு சக்கைகளைப் பயன்படுத்தி காகித ஆலைகள்.
2. மணப்பாடு-தூத்துக்குடி முதலிய கடலோரங்களில் கிடைக்கும் சுண்ணாம்பு படிவங்களைக் கொண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள்
3. மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல்
4. வானம் பார்த்த 'விளாத்திக்குளம்' பகுதிகளில் வேளாண்மை நடைபெற முயற்சி செய்தல்.
5. தேரி மணலிலிருந்து இரசாயனங்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை.
6. உப்பு தொழில்கள்.
7. முத்துகுளி-சங்கெடுத்தலை ஏற்றுமதி செய்வது
துறைமுக வணிகம் :
இந்தியாவில் வேறு எந்த துறைமுகத்திற்கும் கிட்டாத ஒரு பெருமை தூத்துக்குடி துறைமுகத்திற்கு கிடைத்திருக்கிறது. உலகில் ஒரு சில துறை முகங்களுக்கு மட்டுமே தரப்பட்டிருக்கும் சர்வதேச தரச் சான்றிதல் ஐஎஸ்ஓ 9002, பிப்ரவரி 1996 இல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய துறைமுகம் தூத்துக்குடியாகையால், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வாணிகம் சிறந்த கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன.
1. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆப் காமர்ஸ்
2. இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆவ் காமர்ஸ்
3. தூத்துக்குடி தொழிற்சங்கம்
4. தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை.
5. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம்.
6. உப்பு உற்பத்தியாளர் சங்கம்
7. தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம்.
8. தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம்.
9. தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம்.
10. தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம்.
11. சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம்.
12. கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம்.
1. மதுரை சேம்பர் ஆப் காமர்ஸ்
2. விருதுநகர் சேம்பர் ஆப் காமர்ஸ்
3. இராமநாதபுரம் சேம்பர் ஆப் காமர்ஸ்
ஆகிய அமைப்புகளுக்கும் தூத்துக்குடியே மைய இடமாக உள்ளது.
கனிமவளம் :
அ) ஜிப்சம் : கோவில்பட்டி வட்டத்திலும், அருணாசலபுரம், ஒட்டப்பிடாரம்,
எட்டையாபுரம், பகுதிகளிலும் மிகுந்த அளவில் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட்
உற்பத்திக்கு தேவையான பொருள்.
ஆ) அல்லனைட் : இந்த மூலப்பொருள் அணுசக்திக்கு மிகவும் தேவையானது.
இ) லிதியம் : லிதியம் என்பது நெஞ்சக நோய் தீர்க்கும் மருந்துக்குத் துணையாகும்.
கோவில்பட்டிக்கருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தில் லிதியம் கலந்த நீர் கிடைக்கிறது.
இரத்த விருத்தி மருந்து செய்ய இந்த நீரை வேறு இடங்களுக்கு அனுப்பி மருந்துகள்
செய்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 11 | 12 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூத்துக்குடி - Thoothukudi - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தூத்துக்குடி, சங்கம், காமர்ஸ், சேம்பர், ஏற்றுமதி, தொழில், tamilnadu, மாவட்டங்கள், தமிழக, பெரிய, தகவல்கள், லிதியம், தொழிற்சாலை, தமிழ்நாட்டுத், உப்பு, வணிகர்களின், ஜிப்சம், | , கிடைக்கிறது, இங்கு, வணிகர், தொழில்கள், முதலிய, information, districts, thoothukudi, இம்மாவட்டத்தில், சாத்தியக், வேறு, செய்தல், சிமெண்ட், துறைமுகத்திற்கு