திருவாரூர் - தமிழக மாவட்டங்கள்
திருக்கொள்ளம்பூதூர்:
இவ்வூர் வெட்டாற்றின் வடகரையிலிருக்கிறது. இவ்வூர் ஞானசம்பந்தருடைய புராணத்துடன் தொடர்புடையது. இவ்விழா ஐப்பசி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. விபுலானந்தர் எழுதிய 'யாழ்நூல்' வெளிவர உதவிய பெ.ராம.ராம. சிதம்பரம் செட்டியார் ஆதரவால் இவ்வூர் கோயிலிலேயேதான் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.
திருச்செங்காட்டங்குடி:
இச்சிற்றுர் நன்னிலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ளது. திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவிலுள்ளது.
திருச்செங்காட்டங்குடி |
சிறுத்தொண்டர் நினைவாக இக்கோயிலில் முதலாம் ராஜராஜன் சிறுத்தொண்டர் மண்டபம் கட்டியிருக்கிறான்; இக்கோயிலிலுள்ள நவதாண்டவங்கள் அழகான சிலை வடிவங்களாக உள்ளன. இக்கோயிலில் காலையில் தொழுதால் வினை அகலும்; உச்சி வேளையில் வழிபட்டால் இப்பிறப்பின் துயர் நீங்கும்; அந்தி மாலையில் வணங்கினால் ஏழ் பிறப்பின் வெந்துயர் யாவும் விடும் என்பது மக்களின் நம்பிக்கை.
திருப்புகலூர்:
திருப்புகலூர் |
அம்மன் பெயர் கருந்தாழ் குழலி; திருப்புகலூர்க் கோயிலுக்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்னும் உட் கோயிலும் தேவாரம் பாடல்பெற்றது. இங்குள்ள நவக் கிரகங்கள் 'ட' என்ற அமைப்பில் உள்ளன; அப்பருக்கென்று தனி சந்நிதி உண்டு. நாவுக்கரசர் பெயரால் திருமடமும் நந்தவனமும் உள்ளன. இங்கு 67 பழமையான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நெற்குன்றவாணர் என்ற புலவர் பாடியுள்ள 'திருப்புகலூர் அந்தாதி' இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.
திருமருகல்:
இவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகூர் செல்லும் வழியில் இருக்கிறது. அப்பரும் சம்பந்தரும் இங்கு கோயில் கொண்டுள்ள மாணிக்க வண்ணரையும், வண்டுவார் குழலியையும் வணங்கியுள்ளனர். சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயில்களுள் திருமருகல் கோயிலும் ஒன்று.
திருவாஞ்சியம்:
நன்னிலத்துக்கு 6 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர், தேவாரத்தாலும், திருப்புகழாலும், இராஜராஜன் கட்டிய கோயிலாலும் அதிலுள்ள யமன் சந்நிதியாலும் இறைவனுக்கு உள்ள யமன் வாகனத்தாலும் புகழ்பெற்றது.
திருவிற்குடி:
சிவபெருமானுக்குப் பின்னால் விஷ்ணு வடிவம் இருப்பது இங்குள்ள கோயிலின் சிறப்பு. சிவபெருமானின் எட்டு வீரத் தலங்களுள் இவ்வூர் ஒன்று.
தீபங்குடி:
இவ்வூர், நன்னிலத்திற்குத் தென்மேற்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது - சமணர் கோயிலுள்ள இடம். இக்கோயில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதென்று கூறுகின்றனர். பழங்கோயில் ஆற்றால் அழிக்கப்பட்டதாம். இங்கு சமணர்கள் வாழ்கின்றனர்.
கலிங்கத்துப்பரணி பாடிய கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டார் பிறந்த ஊர் இதுவே ஆகும்.
பேரளம்:
இவ்வூர் காரைக்காலுக்குச் செல்லும் வாயிலாக அமைந்திருக்கிறது. தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட சுயம்புநாதசாமி கோயில் இவ்வூரில் இருக்கிறது. இது மேற்குப் பார்த்த கோயில். அம்பிகை - பவானி அம்பிகை; தெற்கு பார்த்த சந்நிதி.
வலங்கைமான்:
கும்பகோணத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் சிவபெருமானின் வலதுகையில் மான் இருப்பதால், வலங்கைமான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சாளர் Right honorable silver tunk வ.ச.சீனிவாச சாஸ்திரியார் பிறந்ததும் இவ்வூரே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - Thiruvarur - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - இவ்வூர், திருப்புகலூர், இருக்கிறது, திருவாரூர், கோயில், மாவட்டங்கள், tamilnadu, தமிழக, செல்லும், இங்குள்ள, இங்கு, உண்டு, தமிழ்நாட்டுத், தகவல்கள், நன்னிலத்திலிருந்து, திருமருகல், எட்டு, | , கோயிலும், சந்நிதி, கட்டிய, அம்பிகை, யமன், வலங்கைமான், ஒன்று, தொலைவில், பார்த்த, சிவபெருமானின், வழியில், தொலைவிலுள்ளது, என்பது, திருச்செங்காட்டங்குடி, information, thiruvarur, districts, இவ்வூருக்கு, சிறுத்தொண்டர், பெயர், உள்ள, இருப்பதால், தொலைவிலுள்ள, இக்கோயிலில், என்னும்